கரூர் துயர சம்பவத்தை ஒட்டி தவெகவில் தொண்டர் அணி உருவாக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் ஒரு ஆண், ஒரு பெண் என மொத்தம் உள்ள 234 தொகுதிகளுக்கும் சேர்த்து 468 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கான ஆலோசனைக் கூட்டமானது நாளை (நவ.2) பனையூர் அலுவலகத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், விஜய் மீண்டும் பரப்புரையை தொடங்குவது குறித்து விவாதிக்கலாம் என்று கூறப்படுகிறது.
