விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே அமல்படுத்துக.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம்…!!

By Swetha on வைகாசி 31, 2026

Spread the love

தமிழகத்தில் நீண்ட கால ஆட்சியை மாற்றி, புதிய மாற்றம் வரும் என்ற நம்பிக்கையில் அரசு அலுவலர்களும் ஆசிரியர்களும் தவெகவிற்கு வாக்களித்து முதலமைச்சர் விஜய்யை ஆட்சிப் பீடத்தில் அமர்த்தியுள்ளனர் என்று தமிழ்நாடு அரசு அலுவலர்கள் சங்கத்தின் மாநில தலைவர் மகேந்திர குமார் தெரிவித்துள்ளார். விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தவெக தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். குறிப்பாக, 59 ஆண்டுகால அரசியல் சூழலை மாற்றியமைத்த புதிய அரசுக்கு தங்களின் வாழ்த்துகளையும் வணக்கங்களையும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசு ஊழியர்களின் பிரதான கோரிக்கையாக பழைய ஓய்வூதிய திட்டம் (OPS) மீண்டும் செயல்படுத்தப்பட வேண்டும் என்று அவர் பிரஷர் கொடுத்துள்ளார். தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி, 01.04.2003 முதல் ஓய்வு பெற்றவர்களுக்கும் மற்றும் தற்போது பணியில் இருப்பவர்களுக்கும் இந்த பழைய ஓய்வூதிய திட்டத்தை முதலமைச்சர் விஜய் கட்டாயமாக அமல்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். கடந்த திமுக அரசு இந்த கோரிக்கையை நிறைவேற்றாத நிலையில், தவெக தலைவர் தனது தேர்தல் அறிக்கையில் இதற்கு உறுதியளித்ததால் தான் அரசு ஊழியர்கள் அவருக்கு ஆதரவாக வாக்களித்தனர் என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

   

பழைய ஓய்வூதிய திட்டம் தவிர மேலும் 3 முக்கிய கோரிக்கைகளையும் அவர் முன்வைத்துள்ளார். அரசு ஊழியர்களின் குறைகளைக் கேட்டு களைவதற்காகத் தனி ‘அரசு பணியாளர் வாரியம்’ அமைக்கப்பட வேண்டும் என்பதும், கடந்த ஆட்சியில் புறக்கணிக்கப்பட்ட சத்துணவு, அங்கன்வாடி, ஊர்ப்புற நூலகங்கள், டேங்க் ஆபரேட்டர்கள், சமையலர்கள், தூய்மை காவலர்கள் உள்ளிட்ட துறைகளில் உள்ள ஊழியர்களுக்குக் கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்பட வேண்டும் என்பதும் அவற்றுள் அடங்கும். இறுதியாக, தற்காலிக மற்றும் தினக்கூலி ஊழியர்களின் ஊதியத்தை நிரந்தர ஊதியமாக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முதலமைச்சர் விஜய் கட்டாயமாக நிறைவேற்ற வேண்டும் என்று மகேந்திர குமார் வலியுறுத்தியுள்ளார்.