இசை மழையில் நனைய தயாரா?… Airtel வாடிக்கையாளர்களுக்கு சூப்பரான அசத்தல் அறிவிப்பு…!

By Srimathi on ஆவணி 19, 2025

Spread the love

இந்துயாவின் 2 ஆவது பெரிய மொபைல் நெட்ஒர்க் ஆப்பரேடாராக, ஏர்டெல் திகழ்கிறது. இது 14 ஆப்பிரிக்க நாடுகளில் செயல்படும். தற்பொழுது தனது வாடிக்கையாளருக்கு ஹாப்பி நியூஸை அறிவித்துள்ளது.

ஆப்பிள் மியூசிக் சேவையை, ஏர்டெல் நிறுவனம் தனது ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு, ஆறு மாதம் இலவசமாக தர முடிவு செய்துள்ளது. ஆப்பிள் மியூசிக்கில், 100 மில்லியனுக்கும் அதிகமான பாடல்கள் உள்ள நிலையில், இதை ஏர்டெல் வாடிக்கையாளர்கள், “மை ஏர்டெல் ஆப்பிள்” சென்று சரி பார்க்கலாம். ஆறு மாதங்களுக்குப் பிறகு, ஆப்பிள் மியூசிக் சேவை வேண்டுமென்றால், மாதம் தோறும் ரூ. 119 கட்டணம் செலுத்தி, பாடல்களைக் கேட்டு மகிழலாம்.