இந்த ஒரு பாட்டே போதும்.. எல்.ஆர். ஈஸ்வரியை ஒதுக்கிய இளையராஜா.. இதான் காரணமா?

By John

Published on:

LR eswari

பழைய துள்ளலிசைப் பாடல்கள் என்றாலே கூப்பிடுங்க எல்.ஆர். ஈஸ்வரியை என்று அனைத்து இசையமைப்பாளர்களும் பிரபல பின்னணிப் பாடகி எல்.ஆர். ஈஸ்வரியின் குரல் வளத்தைப் பயன்படுத்திய நிலையில் இளையராஜா மட்டும் இவரது திறமையைப் பயன்படுத்தவில்லை.

தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர், சிவாஜி காலங்களில் குத்துப் பாடல்களுக்கு பிரபலமானவர் எல்.ஆர். ஈஸ்வரி. அதன்பின் அம்மன் பாடல்களைப் பாடி பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார். இன்றும் வெள்ளிக்கிழமைகளில் இவரது குரலில் ஒலிக்காத அம்மன் பாடல்களே இல்லை எனும் அளவிற்கு கோவில்களில் ஒலிபரப்பப்பட்டு வருகிறது.

   
Amman song
amman song

அப்படியிருக்கையில் இசைஞானி இளையராஜா மட்டும் எல்.ஆர். ஈஸ்வரியை ஒரே ஒரு பாடலுடன் முடித்துக் கொண்டுள்ளார். இதுபற்றி கங்கை அமரன் கூறும் போது, “அவர்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லை. தம்பி, தம்பி என்று எல்.ஆர்.ஈஸ்வரி இளையராஜாவுடன் அன்போடு பழகுவாராம். இளையராஜாவை விட நான்கு வயது மூத்தவர். சிறு வயதில் அவர்கள் ஊரில் எல்.ஆர்.ஈஸ்வரி பாடியதைப் பார்க்க இளையராஜா மற்றும் சகோதரர்கள் அனைவரும் மிக ஆர்வத்துடன் போய்க் காத்திருந்ததை எல்லாம் குறிப்பிட்டார்.

இளையராஜாவின் இசை பாணிக்கு எல்.ஆர்.ஈஸ்வரியின் பாடும் ஸ்டைல் பொருந்தாது என்பதால் மட்டுமே அவரைப் பாட அழைப்பதில்லையாம். இருவரிகளுக்கிடையே ஆ, ஓ, ஊ, ஆஹா, ஆங், ம்ம், போன்ற சப்தங்களெல்லாம் சேர்க்கவேண்டுமல்லவா ? எல்.ஆர்.ஈஸ்வரி பாடும்போது அது கொஞ்சம் ஓவர்டோஸாக ஆவதுபோல் இருப்பதால் இளையராஜா பாணி பாடல்களுக்கு அது பொருந்துவதில்லை என்பது அவர் கருத்து.“ இதனால் தான் இளையராஜா எல்.ஆர்.ஈஸ்வரியை பாட அழைத்ததில்லை என்ற தகவல் உண்டு.

இப்படி ஒரு பட்டப் பெயருடன் நடித்த நடிகை.. அதுக்கும் இவருக்கும் என்ன சம்பந்தம் தெரியுமா?

அப்படி இருக்கையில் எல்.ஆர்.ஈஸ்வரி ஒரே ஒரு பாடல் இளையராஜாவிற்காக பாடியுள்ளார். அந்த ஒரே ஒரு பாடல் எதுவென்றால் நல்லதொரு குடும்பம் என்ற படத்தில் ஒன்.டு.த்ரீ என்று ஆரம்பிக்கும் அந்த ஒரே பாடல் மட்டுமே.

Eswari
Eswari

ஆனால் பி.சுசீலா இளையராஜாவின் இசையில் பல ஹிட் பாடல்களைப் பாடியுள்ளார். மேலும் இந்தியாவின் நைட்டிங்கேல் லதா மங்கேஷ்கரும் இளையராஜா இசையில் சில பாடல்களைப் பாடியுள்ளார். ஆனால் துறுதுறுப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாமல் துள்ளலிசை பாடல்களைப் பாடும் எல்.ஆர். ஈஸ்வரியை மட்டும் இளையராஜா புறக்கணித்தது இசை உலகிற்கு இழப்பு என்றே சொல்லலாம்.

இன்றும் எங்கு சந்தித்தாலும் ஓடி வந்து இளையராஜாவிடம் அன்புடன் பேசுவாராம். இளையராஜாவிற்கு எல்.ஆர்.ஈஸ்வரி மீது மிகுந்த அன்பு உண்டாம்.

author avatar