அவர் சொன்னதால, இளையராஜா என் கால்ல விழுந்தாரு.. பரபரப்பை கிளப்பிய பயில்வான் ரங்கநாதன்..

Spread the love

நடிகர் மற்றும் பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் சினிமா சார்ந்த பல தகவல்களை யூடியூப் சேனல்கள் வாயிலாக பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பயில்வான் ரங்கநாதன் இசைஞானி இளையராஜா குறித்து கூறியதாவது, இளையராஜா ஆரம்பத்தில் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர். எல்லா மனிதர்களுக்கும் இருக்கும் திமிரும், அகங்காரமும் இளையராஜாவுக்கும் உண்டு. பிரபலமானவர்களில் ஒரு சிலர் அதில் விதிவிலக்காக இருக்கலாம். எல்லோருக்கும் இருக்கும் திமிரும் அகங்காரமும் அவருக்கும் இருந்தது. சில நேரங்களில் அதை பத்திரிகையாளர் சந்திப்பில் அதை வெளிப்படுத்துவார். நாம் ஏதாவது கேள்வி கேட்டால், உனக்கு இசையை பற்றி ஏதாவது தெரியுமா என நம்மை பார்த்து கேள்வி கேட்பார். இப்படி பல நேரங்களில் நான் அவருடன் நேரடியாகவே மோதி இருக்கிறேன்.

பல வருடங்களுக்கு முன் ஒரு சரஸ்வதி பூஜை. எங்களை பிரஸ்மீட் வைத்து இளையராஜா அழைத்திருந்தார். பிரசாத் லேப்பில் பிரஸ்மீட் நடந்தது. அப்போது யதார்த்தமாக நான் அவரிடம் ஒரு கேள்வி கேட்டேன். இலங்கையில் இவ்வளவு தமிழர்கள் அவதிப்படுகிறார்கள், தனிநாடு கேட்டு போராடறாங்க, அதைப்பத்தி உங்க கருத்து என்னன்னு கேட்டேன். எனக்கு அதைப்பத்தி ஒண்ணுமே தெரியாதுன்னு சொல்லிட்டார். பத்திரிகைகள் படிக்கறிங்களா, இல்லையான்னு கேட்டதற்கு பத்திரிகை எல்லாம் நான் படிக்க மாட்டேன்னு சொல்லிட்டார். இப்படி பதில் பேசிட்டார். இது வளர்ந்துகிட்டே போய், கடைசியில இலங்கையைப் பத்தி எனக்கு எதுவும் தெரியாதுப்பா, அப்படீன்னு சொல்லிட்டார்.

அப்போது இளையராஜா கூட அவர் தம்பி கங்கை அமரன் இருக்கிறார். அவர்தான் எல்லாவற்றையும் கவனித்துக்கொள்கிறார். அப்போது கங்கை அமரன், அங்கிருந்த எங்களிடம் அண்ணன் ஏதோ கோபத்துல இருக்கிறார். அவர் பேசறதை எல்லாம் பெருசு பண்ணாம இப்படியே விட்டுடுங்க எனக் கேட்டுக்கொண்டார். நான் இளையராஜாவின் முதல் படத்தில் இருந்து இருக்கிறேன். அப்போ பத்திரிகையாளர்கள் வந்து ஒரு 20 பேர்தான் இருப்போம். அப்போது பஞ்சு அருணாசலம் என்ன சொன்னாருன்னா, ஏம்பா, இவங்கதான் உன்னை உருவாக்கறது.

இளையராஜாங்கற உன்பேரை மக்கள் கிட்ட கொண்டு போறது, விமர்சனம் பண்றது எல்லாமே இவங்கதான். இவங்க காலை தொட்டுக் கும்பிடு என்றார். எல்லோரது காலையும் அவர் தொட்டுக் கும்பிட்டார். அப்போது நானும் அங்கு இருந்தேன். என் காலை அவர் தொட்டு கும்பிட்டதால் நான் பெரிய ஆள் என்று அர்த்தம் இல்லை. அவர் இசைஞானிதான். தமிழ் சினிமா இசை என்றால் இளையராஜா பெயர்தான் இருக்கும். அது காலத்தால் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட்டது. அது யாராலும் அழிக்க முடியாது என்று கூறியிருக்கிறார் நடிகர் பயில்வான் ரங்கநாதன்.

admin

Recent Posts

ஐயோ… என்னை விட்டுடுங்க ப்ளீஸ்… அலறித் துடித்த பெண்ணை… வீதியில் இழுத்துச் சென்று 3 பேர் செய்த வெறிச்செயல்… நெஞ்சை பதறவைக்கும் CCTV வீடியோ…!

பெருவின் சான் ஜுவான் டி லூரிகாஞ்சோ பகுதியில் உள்ள காம்போய் நகர்ப்புறப் பிரிவில் அதிர்ச்சியளிக்கும் குற்றச்சம்பவம் ஒன்று நடந்துள்ளது. சாலையில்…

6 மணத்தியாலங்கள் ago

அடச்சீ… நீயெல்லாம் என்ன ஜென்மம்?… சாலையில் தனியாக சென்ற… பெண்ணிடம் தவறாக நடந்த நபர்… இணையத்தில் கொந்தளிக்கும் நெட்டிசென்கள்…!!

பாலியல் வன்கொடுமை மற்றும் அது தொடர்பான வன்முறைகள் தொடர்பான காணொளிகளைப் பகிர்வதோ, அது குறித்துத் தனிநபர்களைத் திரட்டிப் பின்தொடர்வதோ சட்டப்பூர்வமாகவும்…

7 மணத்தியாலங்கள் ago

ஐயோ… ஸ்கூட்டர் மீது அதிவேகமாக வந்த தனியார் பேருந்து மோதி விபத்து… சிபிஎம் தலைவரின் சகோதரர் பரிதாப பலி… நெஞ்சை நடுங்கவைக்கும் கோர சம்பவம்…!!

சிபிஎம் தலைவர் பி. சசியின் சகோதரரான பி. சரசன் (54) அடூர் பாலம் அருகே நிகழ்ந்த பயங்கரச் சாலை விபத்தில்…

7 மணத்தியாலங்கள் ago

திக் திக் திக்.. காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்று… மாட்டு வண்டியில் பிணத்தைக் கடத்திய மனைவி… தெலங்கானாவில் அரங்கேறிய கொடூர சம்பவம்…!!

தெலங்கானா மாநிலம் பூபாலபள்ளி மாவட்டத்தில் குடும்பத் தகராறு காரணமாகத் தனது காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொடூரமாகக் கொலை செய்த மனைவி…

7 மணத்தியாலங்கள் ago

ஐயோ… என்ன கொடுமை இது?… செல்போனால் நேர்ந்த பயங்கரம்… அக்காவுடன் தகராறு… 8 வயது சிறுவன் சோக முடிவு… உ . பி – யில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

ஜாலான் மாவட்டம் குடவுந்த் காவல் எல்லைக்குட்பட்ட தூங்கர்பூர்வா கிராமத்தில், மொபைல் போன் தொடர்பான தகராறில் 8 வயது சிறுவன் ஒருவன்…

7 மணத்தியாலங்கள் ago

ஐயோ… என்ன சத்தம் அது?… தீடீரென சுக்குநூறாக நொறுங்கிய கார்… குஜராத்தில் பயங்கர சிஎன்ஜி வெடிப்பு… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!!

குஜராத் மாநிலம் வடோதராவின் நவி ராம்வாடி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சிஎன்ஜி கார் ஒன்று திடீரென தீப்பற்றி, எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன்…

7 மணத்தியாலங்கள் ago