மொத்தமாக கைவிடப்படும் இளையராஜாவின் பயோபிக்.. முக்கிய காரணமே இவர்தானா..?

By Nanthini on மார்கழி 12, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் தன்னுடைய இசையால் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் தான் இளையராஜா. சிறு குழந்தை முதல் முதியோர்கள் வரை அவருடைய பாடலை ரசிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. அந்த அளவிற்கு ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒரு அங்கமாக இளையராஜாவின் பாடல்கள் இருந்துள்ளது. தற்போது 80 வயதுக்கு மேலாகியும் இளையராஜாவை சுறுசுறுப்போடு இயங்க வைத்துக் கொண்டிருப்பது அவருடைய இசை தான். இவரின் இசை பயணத்தை பல விழாக்களாக கொண்டாடினாலும் படமாக இதுவரை இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு எடுக்கப்படாமல் இருந்தது.

Dhanush releases first poster of Ilaiyaraaja biopic | இளையராஜா வாழ்க்கை வரலாற்று படத்தின் முதல் போஸ்டர் வெளியீடு

   

இதனை தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு இளையராஜாவின் பயோபிக் பற்றிய அப்டேட் வெளியாகியது. அதன்படி இந்த பயோபிக்கில் இளையராஜாவாக தனுஷ் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்க உள்ளதாகவும் திரைக்கதை அமைப்பும் பொறுப்பை கமல்ஹாசன் ஏற்றிருந்ததாகவும் கூறப்பட்டது. இதனால் இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. இந்த படத்திற்கு இளையராஜாவின் இசையை பயன்படுத்திக் கொள்ளவும் முடிவு செய்தனர்.

   

தன்னுடைய வேலைகளில் பிஸியாக இருக்கும் தனுஷ்!! பயோபிக்கிற்காக கண்டிஷன் போட்டு காத்துக் கொண்டிருக்கும் இளையராஜா!! - News4 Tamil | Online Tamil News ...

 

குபேரா படத்தில் நடித்து முடித்ததும் இளையராஜா பயோபிக் தொடங்குவதாக இருந்த நிலையில் திடீரென்று படத்திற்கு திரைக்கதை அமைக்கும் பொறுப்பில் இருந்து சில மாதங்களுக்கு முன்பு கமல்ஹாசன் விலகினார். பிறகு இந்த படம் குறித்த எந்த ஒரு அப்டேட்டும் வெளிவராமல் இருந்த நிலையில் தற்போது அந்த படத்தை கைவிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. படத்தின் பட்ஜெட் அதிகரித்ததால் கைவிடப்பட்டதாலும் சில கருத்து வேறுபாடுகள் காரணமாக படம் கைவிடப்பட்டு விட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் அதற்கான உண்மை காரணம் என்ன என்பதை இதுவரை தெரியவில்லை.