பின்னணி பாடகியும் இசை அமைப்பாளருமான பவதாரிணி அவர்கள் நேற்றைய முன்தினம் மரணம் அடைந்தார். இந்த செய்தி அவருடைய குடும்பத்தார் மட்டுமில்லாமல், ஒட்டுமொத்த தமிழ் திரையுலகினரை அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியது என்று தான் சொல்ல வேண்டும். ஆறு மாதங்களுக்கு முன்பு புற்றுநோய் இருப்பது தெரியவந்த நிலையில் அதற்க்கான சிகிச்சையும் எடுத்து வந்திருக்கிறார் பவதாரிணி அவர்கள். இளையராஜா மகளை தாண்டி பன்முக திறமைகொண்ட பவதாரிணி, இன்னும் பல சாதனைகளை செய்திருக்க வேண்டும் என்று தான் சொல்ல வேண்டும்.

#image_title
இலங்கையில் மரணமடைந்த பவதாரணியின் உடல் நேற்று சென்னைக்கு கொண்டுவரப்பட்டது. சென்னையில் அவரது வீட்டில் வைக்கப்பட்ட நிலையில், பல திரைபிரபலங்கள் பவதாரணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்தனர். இந்நிலையில் பவதாரணியின் உடல் இளையராஜா அவர்களின் சொந்த ஊரான தேனிக்கு கொண்டுசெல்ல பட்டுள்ளது. அங்கு தான் அவருடைய உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது என்பதாக கூறப்படுகிறது.

#image_title
இந்நிலையில் இளையராஜா குடும்பத்தினர் அனைவரும் தேனிக்கு சென்ற நிலையில், இளையராஜா அவர்கள் சற்றுமுன் தேனிக்கு வந்துள்ளார். கண்ணாடி பெட்டிக்குள் வைக்கப்பட்டிருக்கும் தனது அன்பு மகள் பவதாரணியின் உடலை பார்த்து அப்படியேய் உறைந்து போய் நிறைந்த இளையராஜாவை பார்க்கும்போது அனைவரின் உள்ளமும் உடைந்துபோய்விட்டது என்று தான் சொல்ல வேண்டும். ஒரு தந்தைக்கு இப்படி ஒரு நிலைமை வரக்கூடாது என்று சொல்லவது போல அந்த தருணம், காண்போரை சோகத்தில் ஆழ்த்தியது. இதோ அந்த வீடியோ..