தேசிய விருது பெற்ற வைரமுத்து, கடுப்பான இளையராஜா – இவர்கள் மோதலுக்கு இதுதான் காரணமா? – வெளிச்சத்துக்கு வந்த உண்மை!

By Sumathi

Published on:

Music director Ilayaraja

பாரதிராஜா, இளையராஜா, வைரமுத்து – இவர்கள் ஒன்றாக பணிபுரிந்த அந்த காலகட்டத்தை தமிழ் சினிமாவின் பொற்காலம் என்ற தாராளமாக சொல்லாம். புழுதிக்காட்டு மண்ணை, அந்த மக்கள் வாழ்ந்த விழுமிய வாழ்க்கையை வண்ணத்திரையில், ரசிகர்களின் பார்வைக்கு கொண்டு வந்தார் பாரதிராஜா.

   

அந்த வாழ்வியல் சோகங்களை இளையராஜா இசையாக கோர்க்க, அதற்கான வார்த்தைகளை தேர்ந்தெடுத்து தந்து, தன் கவிதை வார்த்தைகளால் பாமாலையாக தொடுத்து தந்தார் வைரமுத்து. அதனால் 16 வயதினிலே, அலைகள் ஓய்வதில்லை. கிழக்கு போகும் ரயில், முதல் மரியாதை, கடலோர கவிதைகள் என அந்த படங்கள் மக்களின் வாழ்க்கையை பேசியது. பாடல்கள் பட்டிதொட்டி எங்கும் ஒலித்தது. இளையராஜாவின் இசை உள்ளங்களில் பூப்பூத்தது.

ஆனால் ஆறு ஆண்டுகள் மட்டுமே நீடித்த இளையராஜா – வைரமுத்து நட்பு கண் திருஷ்டி பட்டது போல் பிரிந்தது. இதுகுறித்து பத்திரிகையாளர் ராஜகம்பீரன் ஒரு நேர்காணலில் கூறியதாவது, வைரமுத்து சிறுவயதில் மிகவும் வறுமையில் வாழ்ந்தவர். 15 வயதில்தான் காலில் காலணியே அணிந்திருக்கிறார். 8ம் வகுப்பு படிக்கும்போதுதான் ரயிலையே நேரில் பார்த்திருக்கிறார். சென்னை பச்சையப்பா கல்லூரியில் படித்த போது அயனாபுரத்தில் உறவினர் வீட்டில் தங்கி படித்திருக்கிறார்.

கவிஞராக சினிமாவுக்குள் சென்ற பின், பாரதிராஜா, இளையராஜா, வைரமுத்து என ஒரு வெற்றிக் கூட்டணி உருவானது. நிழல்கள் துவங்கி, கடலோர கவிதைகள் வரை, 6 ஆண்டுகள் மட்டுமே இளையராஜா – வைரமுத்து கூட்டணி நீடித்திருக்கிறது. முதல் மரியாதை படப் பாடல்களுக்காக தேசிய விருது பெற்ற பின், இளையராஜாவுக்கு வைரமுத்துவை பிடிக்காமல் போனது.

அதற்கு காரணம், தன்னை கும்பிட்டு வணங்கி நிற்பவர்கள், கடைசி வரை அப்படியே இருந்தால்தான் கடைசி வரை அவர்களுடன் நட்பு கொள்ள இளையராஜா விரும்புவார். அவர்கள் உயர்வுக்கு வந்து தலைநிமிர்ந்து நிற்க துவங்கினால், அந்த நட்பை உடனே கைவிட்டு விடுவார்.

தேசிய விருது பெற்ற கவிஞனாக, ஒரு மிடுக்குடன் தன்முன் தலைநிமிர்ந்து நின்ற வைரமுத்துவை பார்த்து கடுப்பான இளையராஜா, அவரது பாடல்களை பலமுறை திருத்தினார். அதனால் வைரமுத்துவை வருத்தினார். 6 ஆண்டு காலத்தில் அவர்கள் உருவாக்கிய பாடல்கள் நினைவில் நீங்காத பாடல்களாக உருவானதால், 30 ஆண்டுகளுக்கு மேல் இருவரும் ஒன்றாக பணிபுரிந்தது போன்ற ஒரு பிரமிப்பை ஏற்படுத்தி விட்டனர். ஆனால் உண்மையில் இவர்கள் பிரிவால் நஷ்டமடைந்தது ரசிகர்கள்தான். மீண்டும் சில நேரங்களில் வைரமுத்து சமரசம் செய்ய முன்வந்து, சிலர் இளையராஜாவிடம் பேசியும் அவர் ஒரே முடிவில் இருந்துவிட்டார், என்று கூறியிருக்கிறார் ராஜ கம்பீரன்.

author avatar
Sumathi