6 மாதங்களாக புற்றுநோயுடன் போராட்டம்.. 47 வயதிலே மரணம்.. பலரும் அறியாத இசைஞானி மகள் பவதாரணியின் வாழ்க்கை பயணம்..

By Sumathi on ஜனவரி 25, 2024

Spread the love

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள், பின்னணிப் பாடகி பவதாரிணி புற்றுநோயால் இன்றுமாலை 5 மணியளவில் இலங்கையில் உயிரிழந்தார். கல்லீரல் புற்றுநோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக அவர் இலங்கை சென்ற நிலையில், 6 மாதங்களாக அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் இலங்கையில் மாலை 5 மணியளவில் உயிரிழந்தார்.

அவரது உடல் நாளை (ஜனவரி 26) சென்னைக்கு கொண்டு வரப்பட்டு அங்கு இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளன. அவர் கணவருடன் வாழ்ந்த வந்த நிலையில், குழந்தை இல்லை. இறந்த பவதாரிணிக்கு வயது 47.பிரபல இசையமைப்பாளர்கள் கார்த்திக் ராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆகியோரின் சகோதரிதான் பவதாரணி.

   

   

‘பாரதி’ படத்தின் ‘மயில் போல பொண்ணு ஒண்ணு’ என்ற தமிழ் பாடலுக்காக சிறந்த பெண் பின்னணி பாடகிக்கான தேசிய திரைப்பட விருதை வென்றார்.பிரபுதேவா ரோஜா நடித்த ‘ராசையா’ என்ற படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமானவர் பவதாரிணி. அப்போதிருந்து, அவர் தனது தந்தை இளையராஜா மற்றும் சகோதரர்களான கார்த்திக் ராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆகியோருக்காக அவர்களது இசையில் பல பாடல்களைப் பாடினார். அவர் இசையமைப்பாளர்களான தேவா மற்றும் சிற்பி ஆகியோருக்காக பாடல்களையும் பாடியுள்ளார்.

 

2002ம் ஆண்டில், ரேவதி இயக்கிய ‘மத்ர், மை ப்ரெண்ட்’ என்ற படத்திற்கு இசையமைப்பாளராக பவதாரணி மாறினார். பின்னர் அவர் ‘பிர் மிலேங்கே’ மற்றும் ஒரு சில படங்களுக்கு இசையமைத்தார். அவரது கடைசியாக இசையமைத்த இசை ஆல்பம் மலையாளப் படமான ‘மாயநதி’க்காக இருந்தது. 100 படங்களுக்கு மேல் பவதாரணி இசையமைத்தவர் என்று கூறப்படுகிறது.

இவர் காதலுக்கு மரியாதை,’பாரதி, அழகி, நண்பர்கள், மங்காத்தா மற்றும் அனேகன் போன்ற தமிழ்த் திரைப்படங்களில் பாடல்களைப் பாடியுள்ளார்.பவதாரணியின் கணவர் ஓட்டல் ஒன்றை நடத்தி வருகிறார் என்று கூறப்படுகிறது. இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இளையராஜா தற்போது இலங்கையில்தான் இருக்கிறார், இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதாக அவர் இலங்கை சென்றிருப்பதாகவும் கூறப்படுகிறது.

author avatar
Sumathi