பாக்யராஜ் மேல் இருந்த கோபத்தால் பார்த்திபனுக்கு இசையமைக்க மறுத்த இளையராஜா… சுவாரஸ்யமான கதை!

By vinoth on தை 31, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனராகவும் நடிகராகவும் 30 ஆண்டுகளுக்கு மேலாக வரும் வருகிறார். அவர் தான் இயக்கி நடித்த புதிய பாதை என்ற வெற்றிப் படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் நுழைந்தார். அதற்கு முன்னர் இயக்குனர் பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார்.

புதிய பாதை படத்தில் அப்போது முன்னணி நடிகையாக இருந்த சீதாவைக் கதாநாயகியாக நடிக்க வைத்தார். அந்த படத்தின் உருவாக்கத்தின் போது இருவரும் காதலில் விழுந்தனர். அதன் பின்னர் பெற்றோர் எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்துக்குப் பிறகு நடிப்பைக் குறைத்துக் கொண்டார் சீதா. ஆனால் பார்த்திபன் நடிகராகவும் இயக்குனராகவும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

   

அவரின் இந்த பயணத்தில் பல ஏற்ற இறக்கங்களை சந்தித்துள்ளார் பார்த்திப்ன. நடிகராக சம்பாதிக்கும் பணத்தை இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் முதலீடு செய்து வித்தியாசமான படங்களை இயக்கி கையை சுட்டுக் கொள்கிறார். ஆனாலும் தொடர்ந்து வித்தியாசமான(?) படங்களை தமிழ் சினிமாவுக்குக் கொடுத்து வருகிறார்.

   

 

பார்த்திபன் இயக்குனராகவும் நடிகராகவும் அறிமுகமான முதல் படம் ‘புதிய பாதை’. ஆனால் அதற்கு முன்பாகவே பார்த்திபன், பாக்யராஜ் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்குவதாக இருந்தார். அந்த படத்தின் போஸ்டர் எல்லாம் வெளியிட்டு படத்தை அறிவித்தனர். அந்த படத்துக்கு இளையராஜாதான் இசையமைப்பாளராக பணியாற்ற வேண்டும் எனப் பார்த்திபன் கேட்டுள்ளார். ஆனால் அப்போது பாக்யராஜ் தானே இசையமைப்பாளர் ஆகி சில படங்களுக்கு இசையமைத்து வந்ததால் அவர் மேல் கோபத்தில் இருந்த இளையாராஜா, பாக்யராஜ் தயாரிக்கும் படத்துக்கு இசையமைக்க முடியாது என சொல்லிவிட்டாராம்.

அதன் பின்னர் பாக்யராஜே இசையமைப்பதாக இருந்த அந்த படமும் கைவிடப்பட்டது. ஆனால் இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் அதன் பிறகு பாக்யராஜ் மற்றும் பார்த்திபன் ஆகிய இருவருக்குமே இளையராஜா இசையமைத்துள்ளார் என்பதுதான்.