ஒரேயொரு வார்த்தையை மாற்றி படத்தின் டைட்டிலில் கவித்துவத்தை உயர்த்திய இளையராஜா… எந்த படம் தெரியுமா?

By vinoth on மார்ச் 31, 2025

Spread the love

இன்றைக்கு உலகில் இருக்கும் இசையமைப்பாளர்களில் வயதிலும் அனுபவத்திலும் மூத்தவராக இருக்கிறார் இளையராஜா. இப்போதும் தன்னுடைய 82 ஆவது  வயதில் பிஸியாக பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதுவரை அவர் 1200 படங்களுக்கு இசையமைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இது தவிர இசைக் கச்சேரிகளை உலகம் முழுவதும் நடத்தியுள்ளார்.

தமிழ் சினிமாவில் பல ஜாம்பவான் இசையமைப்பாளர்கள் உருவாகியுள்ளார்கள். ஆனால் அவர்களுக்கும் இளையராஜாவுக்கும் இடையே உள்ள பெரிய வித்தியாசமே பின்னணி இசையில் இளையராஜாவுக்கு நிகர் அவர் மட்டுமே. அவரின் வருகைக்குப் பிறகே தமிழ் சினிமாவில் பின்னணி இசையை இயக்குனர்கள் உணர ஆரம்பித்தார்கள் என்றால் அது மிகையாகாது.

   

இளையராஜா மிகவும் மென்மையான மற்றும் ஆன்மீக ரீதியான இசையைதான் அதிகமாக விரும்புவார். ஆனால் அவர் இசையமைத்ததில் பெரும்பாலானப் படங்கள் எல்லாம் கமர்ஷியல் படங்கள்தான். ஆனால் அதிலும் தன்னுடைய முத்திரையைப் பதித்தவர்.

   

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், 80 களில் தன்னுடைய இசையமைப்புப் பற்றியும் தனக்குப் பிடித்த இயக்குனர்களோடு பணியாற்றியது பற்றியும் பேசினார். அதில் “பாலு மகேந்திரா சார் ஒரு படம் முடித்துவிட்டு அடுத்த படத்துக்கு வருவதற்குள் நான் ஐம்பது அறுபது படங்கள் முடித்திருப்பேன். ஆனால் எனக்கு யார் படங்களுக்கு எல்லாம் இசையமைக்கப் பிடிக்குமென்றால் மிகக் குறைவானவர்கள்தான்… பாலு மகேந்திரா, பாரதிராஜா , மணிரத்னம் மற்றும் மகேந்திரன். இவர்கள் படமெல்லாம் வந்தால் எனக்கு அப்பாடா என்றிருக்கும்.” எனப் பாராட்டிப் பேசியிருந்தார்.

 

இந்நிலையில் மகேந்திரனின் ‘உதிரிப்பூக்கள்’ படத்தில் நடந்த சுவாரஸ்யமான சம்பவம் பற்றி பேசியுள்ளார். அதில் “அந்த படத்துக்கு முதலில் ‘காட்டுப்பூக்கள்’ என்றுதான் மகேந்திரன் சார் தலைப்பு வைத்திருந்தார். நான்தான் பேசிக்கொண்டிருக்கும் போது “ஏன் இப்படி ஒரு தலைப்பு? ‘உதிரிப்பூக்கள்’ என்று வையுங்கள் என சொன்னேன். அதைக் கேட்டு அவரும் அந்த தலைப்பை வைத்தார்.” எனக் கூறியுள்ளார்.