Categories: சினிமா

பாட்டு மட்டும் போதாதா..? ரசிகர்களுக்காக புதிய முன்னெடுப்பை தொடங்கியுள்ள இளையராஜா!

Spread the love

சினிமாவில் தன்னுடைய 50 ஆவது ஆண்டை  விரைவில் தொடப் போகிறார் இசைஞானி இளையராஜா. தமிழ் சினிமாவின் தனிப்பெரும் சாதனையாளர்களில் ஒருவர் இளையராஜா. உலகளவில் அவர் அளவுக்கு அதிக படங்களில் இசையமைத்த இசையமைப்பாளர் இல்லை. இப்போதும் தன்னுடைய 82 ஆவது  வயதில் பிஸியாக பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதுவரை அவர் 1500 படங்களுக்கு இசையமைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தமிழ் சினிமாவில் பல ஜாம்பவான் இசையமைப்பாளர்கள் உருவாகியுள்ளார்கள். ஆனால் அவர்களுக்கும் இளையராஜாவுக்கும் இடையே உள்ள பெரிய வித்தியாசமே பின்னணி இசையில் இளையராஜாவுக்கு நிகர் அவர் மட்டுமே. இளையராஜா 76 ஆம் ஆண்டு அன்னக்கிளி திரைப்படம் மூலம் அறிமுகமான நிலையில் ஐந்தே ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் நம்பர் 1 இசையமைப்பாளராக ஆனார்.

#image_title

அதன் பிறகு மிடாஸ் மன்னன் போல அவர் தொட்டதெல்லாம் தங்கமாக மாறின. அந்தளவுக்கு அவர் பாடல்கள் அடுத்த சில தசாப்தங்களுக்கு தமிழர்களை மயக்கியது. அதன் பின்னர் 1992 ஆம் ஆண்டு ரஹ்மானின் வருகைதான் அதன் பிறகு தமிழ் சினிமா இசையின் போக்கை மாற்றியது.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இளையராஜா மீண்டும் ரசிகர்களின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஆகியுள்ளார். மீண்டும் அவரது பழைய பாடல்களை இன்றைய தலைமுறை இளைஞர்கள் கேட்க ஆரம்பித்துள்ளனர். அவரின் பாடல்கள் மட்டும் இல்லாமல் அவரின் பின்னணி இசையும் இப்போது ரசிகர்களின் விருப்பத்துக்கு உரியது ஆகியுள்ளது.

அதை உணர்ந்த இளையராஜா சமீபத்தில் தன்னுடைய இசைக் கச்சேரிகளில் காட்சிகளை ஓடவிட்டு அதன் பின்னணியில் அதற்கான இசையையும் லைவ்வாக இசைக்க செய்கிறார். அது பெரிய அளவில் ரசிகர்களைக் கவர்ந்தது. இந்நிலையில் தற்போது இளையராஜா தன்னுடைய பின்னணி இசைத் தொகுப்புகளுக்கு என்றே ஒரு யுடியூப் சேனலை உருவாக்கியுள்ளார்.

அதில் அவரின் பின்னணி இசைத் தொகுப்புகள் மட்டும் வெளியிடப்படும் என சொல்லப்படுகிறது. சமீபத்தில் அந்த சேனலுக்கான ப்ரோமோ வெளியிடப்பட்டது.

vinoth

Recent Posts

“திமுகவா? அதிமுகவா?”… தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்?… ஆட்சியை தீர்மானிக்கப் போகும் அந்த 43 இடங்கள்.. தந்தி டிவி கணிப்பில் வெளியான பகீர் முடிவுகள்…!

தமிழக சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தந்தி டிவி வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு முடிவுகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை…

52 seconds ago

“என் வயிற்றில் பிறந்த துரோகி” அவனுக்கு யாரும் ஓட்டு போடாதீங்க… ராமதாஸ் வெளியிட்ட பரபரப்பு வீடியோ..!!

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் உடல்நிலை பாதிப்பு காரணமாகத் தைலாபுரம் தோட்டத்தில் ஓய்வெடுத்து வரும் நிலையில், சமூக வலைதளங்கள்…

2 minutes ago

மீண்டும் Work From Home?… கொரோனாவை விட மோசமான எரிசக்தி போர்…. ஐரோப்பாவையே உலுக்கிய ‘4 As’ ஃபார்முலா… இந்தியாவிலும் இனி இதுதான் கதியா..?

உக்ரைன் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நீடிக்கும் போர்ச் சூழலால் ஐரோப்பிய நாடுகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் "மிகவும் தீவிரமான"…

4 minutes ago

நாடே ஷாக்..! 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 11 வயது சிறுவன்… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!

இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில், 7 வயது சிறுமி 11 வயது சிறுவனால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

5 minutes ago

“திமுகவுக்கு அடித்த லக்கி பிரைஸ்!” – கடைசி நேரத்தில் ஓவைசி செய்த அந்த ஒரு செயல்… தமிழக தேர்தலில் திடீர் திருப்பம்…!

தமிழக சட்டசபை தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) கட்சியின் தலைவர் அசாதுதீன்…

8 minutes ago

அதை செய்யாவிட்டால் “குண்டுகளை வீசுவோம்” ஈரானுக்கு டொனால்ட் ட்ரம்ப் விடுத்த பகிரங்க மிரட்டல்… மீண்டும் பதற்றம்..!!

ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான போர் நிறுத்தம் தொடர்பாக சுமுகமான உடன்பாடு எட்டப்படாவிட்டால், அந்த நாட்டின் மீது குண்டுகள் வீசப்படும்…

9 minutes ago