Categories: சினிமா

இளையராஜா சுயமரியாதையை விட்டுக்கொடுப்பவரா?… சாம்பிளுக்கு இதோ ஒரு சம்பவம்!

Spread the love

தமிழ் சினிமாவின் தனிப்பெரும் சாதனையாளர்களில் ஒருவர் இளையராஜா. உலகளவில் அவர் அளவுக்கு அதிக படங்களில் இசையமைத்த இசையமைப்பாளர் இல்லை. இப்போதும் தன்னுடைய 82 ஆவது  வயதில் பிஸியாக பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதுவரை அவர் 1200 படங்களுக்கு இசையமைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தமிழ் சினிமாவில் பல ஜாம்பவான் இசையமைப்பாளர்கள் உருவாகியுள்ளார்கள். ஆனால் அவர்களுக்கும் இளையராஜாவுக்கும் இடையே உள்ள பெரிய வித்தியாசமே பின்னணி இசையில் இளையராஜாவுக்கு நிகர் அவர் மட்டுமே. அவரின் வருகைக்குப் பிறகே தமிழ் சினிமாவில் பின்னணி இசையை இயக்குனர்கள் உணர ஆரம்பித்தார்கள் என்றால் அது மிகையாகாது.

அதுபோல இளையராஜாதான் நாட்டுப்புற பாடல்களில் இருந்தே ட்யூன்களை எடுத்து அதை மெருகேற்றி பாடல்களை கொடுத்து மக்களை மெய்மறந்து ரசிக்க வைத்தார். இளையராஜா அறிமுகமான போது அவருக்கு மக்களிடம் கிடைத்த ஆதரவு அப்போதிருந்த விமர்சகர்களிடம் கிடைக்கவில்லை.

ஆனாலும் அனைத்தையும் தாண்டி தமிழ் சினிமாவில் முடி சூடா மன்னனாக 15 ஆண்டுகளுக்கு மேல் வலம் வந்தார். இந்நிலையில் நேற்று இளையராஜா ஆண்டாள் கோயிலுக்கு சென்றபோது அவரை கருவறைக்குள் அனுமதிக்கவில்லை என்றும், அதை எதிர்க்காமல் இளையராஜா மண்டபத்துக்கு வெளியே நின்றே மரியாதையைப் பெற்றுக்கொண்டார் என்றும் சர்ச்சைகள் கிளம்பின. ஆனால் இளையராஜா ‘நான் எந்த இடத்திலும் என்னுடைய சுயமரியாதையை விட்டுக் கொடுக்க மாட்டேன்” என பதிவிட்டுள்ளார்.

#image_title

இந்நிலையில் இளையராஜா தன்னுடைய சுயமரியாதையை எந்த சூழலிலும் விட்டுக் கொடுக்க மாட்டார் என்பதற்கு சாட்சியாக முகநூலில் ஒரு பதிவு வைரல் ஆகி வருகிறது. இளையராஜா இசையமைத்த வால்மீகி என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பல முன்னணி இயக்குனர்கள் கலந்துகொண்டனர். அந்த விழாவில் கலந்துகொண்ட மிஷ்கின் பேசும்போது “இயக்குனர்கள் எல்லாரும் ஒருபடமாவது இளையாராஜாவுடன் வேலை செய்ய வேண்டும் என்று பேச, உடனே இளையராஜா எழுந்து, மிஷ்கினிடம் இருந்த மைக்கை வாங்கி, நீ எனக்கு PRO வேலை பார்க்கிறாயா? எனக்கு யாரும் வாய்ப்பு வாங்கி தரவேண்டிய அவசியம் இல்லை, அந்த நிலையில் நானும் இல்லை, இசையோடு கிடடா நாயே என என்னை இறைவன் படைத்துவிட்டான் அதனால் எனக்காக யாரும் பேசத்தேவையில்லை” என்று சொல்லிவிட்டு அந்த நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறிவிட்டார்.

vinoth

Recent Posts

“யாரும் எதிர்பார்க்காத டுவிஸ்ட்”… ஈரானுடன் டீல் போட்ட சீனா… ட்ரம்ப்பின் ட்ரூத் சோஷியல் பதிவால் அதிரும் உலக நாடுகள்…!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஹார்முஸ் நீரிணையை சீனாவுக்காக நிரந்தரமாகத் திறப்பதாக அறிவித்துள்ளது சர்வதேச அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.…

2 minutes ago

“வாடா மோதிப்பார்க்கலாம்” மயில் vs பாம்பு.. ஜெயிக்கப்போவது யார்..? நடுரோட்டில் நடந்த பயங்கர மோதல்… வைரல் வீடியோ..!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரு மயில் மற்றும் ஒரு பாம்புக்கு இடையே நடக்கும் கடுமையானப் போராட்டம்…

3 minutes ago

உஷார்!.. “பிரிட்ஜ் கம்ப்ரஸர் வெடிக்க இதுதான் காரணமா?”.. கோடை காலத்தில் நீங்கள் செய்ய வேண்டிய 3 தற்காப்பு நடவடிக்கைகள்…!!!

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், வீடுகளில் பிரிட்ஜ் பயன்பாடு பன்மடங்கு உயர்ந்துள்ளது. இந்தச் சூழலில், பிரிட்ஜை சுவரோடு ஒட்டி…

4 minutes ago

“வாட்ச் முதல் லேட்டஸ்ட் ஐபோன் வரை!” – ஒவ்வொரு ஆண்டும் ஊழியர்களை திக்குமுக்காட வைக்கும் ‘மெகா’ பாஸ்… சீன நிறுவனத்தின் தாராள குணத்தால் கடுப்பான இந்திய நெட்டிசன்கள்…!

உலகெங்கும் ஆட்குறைப்பு மற்றும் பொருளாதார மந்தநிலை குறித்த கவலைகள் நிலவி வரும் சூழலில், சீனாவைச் சேர்ந்த மீடியாஸ்டார்ம் (Mediastorm) நிறுவனம்…

6 minutes ago

பகீர் வீடியோ..! சாலையில் சிதறிய கோழிகள்… மனிதாபிமானத்தை காற்றில் பறக்கவிட்டு வேட்டையாடிய மக்கள்… வைரல் வீடியோ.!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், சாலையில் கோழிகள் ஏற்றிச் சென்ற வண்டி விபத்துக்குள்ளானதை அல்லது நின்றுகொண்டிருந்ததைச் சாதகமாக்கிக்…

7 minutes ago

“போதும் கீழே இறங்குங்க”… நேரலையில் எடப்பாடியைத் தொட்டு மோடி சொன்னது என்ன?… குமரியில் பரபரப்பு….!

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் பரப்புரை உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதன் ஒரு பகுதியாக,…

10 minutes ago