அவன் மட்டும் அடிக்கடி ஞாபகத்தில் வருவான்… நண்பன் குறித்து இளையராஜா பகிர்ந்த நினைவு!

By vinoth on மாசி 4, 2025

Spread the love

இன்றைக்கு உலகில் இருக்கும் இசையமைப்பாளர்களில் வயதிலும் அனுபவத்திலும் மூத்தவராக இருக்கிறார் இளையராஜா. இப்போதும் தன்னுடைய 82 ஆவது  வயதில் பிஸியாக பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதுவரை அவர் 1200 படங்களுக்கு இசையமைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இது தவிர இசைக் கச்சேரிகளை உலகம் முழுவதும் நடத்தியுள்ளார்.

தமிழ் சினிமாவில் பல ஜாம்பவான் இசையமைப்பாளர்கள் உருவாகியுள்ளார்கள். ஆனால் அவர்களுக்கும் இளையராஜாவுக்கும் இடையே உள்ள பெரிய வித்தியாசமே பின்னணி இசையில் இளையராஜாவுக்கு நிகர் அவர் மட்டுமே. அவரின் வருகைக்குப் பிறகே தமிழ் சினிமாவில் பின்னணி இசையை இயக்குனர்கள் உணர ஆரம்பித்தார்கள் என்றால் அது மிகையாகாது.

   

இதையடுத்து இப்போது இளையராஜா தற்போது தன்னுடைய ‘valiant’ என்ற முதல் சிம்ஃபொனியை நிகழ்த்த உள்ளார். அதற்கான ஒத்திகை வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி கவனம் பெற்றன. இதையடுத்து பல இணையச் சேனல்களில் இளையராஜா நேர்காணல்கள் கொடுத்து வருகிறார்.

   

அப்படி ஒரு நேர்காணலில் தன்னுடன் பணியாற்றிவிட்டு இப்போது இந்த உலகில் இல்லாதவர்கள் பற்றிய நினைவுகள் குறித்து கேட்டபோது “என்னுடன் இல்லாதவர்கள் பற்றி எப்போதாவது ஞாபகம் வருமா என்றால், வரும்தான்… நானும் மனிதன்தானே. இசைத்துறையில் என்று எடுத்துக்கொண்டால்  இவன் ஞாபகம் அடிக்கடி… SPB அடிக்கடி என் நினைவுகளில் வருவான். ஆனால் நம்மை விட்டு சென்றவர்களின் பிரிவை நாம் ஏற்றுக்கொள்ளதான் வேண்டும். அதுதானே இயற்கை.” எனக் கூறியுள்ளார்.

 

எஸ் பி பி மறைவதற்கு சில ஆண்டுகள் முன்னால் இருவருக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டு பிரிந்திருந்தனர். இளையராஜாவின் பாடல்களை எஸ் பிபி அனுமதி இல்லாமல் கச்சேரிகளில் பாடக்கூடாது என நோட்டீஸ் அனுப்பியிருந்தார். அது சம்மந்தமாக இருவருக்கும் ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் குரல்கள் எழுந்தன.

ஆனால் அதன் பிறகு இருவரும் சமாதானம் ஆகி இளையராஜா இசையில் எஸ் பி பி ஒரு பாடலைப் பாடினார். அந்த சந்திப்பில் இருவரும் மிகவும் நெகிழ்ச்சியாகக் காணப்பட்டார்கள்.