#image_title
சினிமாவில் தன்னுடைய 50 ஆவது ஆண்டை விரைவில் தொடப் போகிறார் இசைஞானி இளையராஜா. தமிழ் சினிமாவின் தனிப்பெரும் சாதனையாளர்களில் ஒருவர் இளையராஜா. உலகளவில் அவர் அளவுக்கு அதிக படங்களில் இசையமைத்த இசையமைப்பாளர் இல்லை. இப்போதும் தன்னுடைய 82 ஆவது வயதில் பிஸியாக பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதுவரை அவர் 1500 படங்களுக்கு இசையமைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
தமிழ் சினிமாவில் பல ஜாம்பவான் இசையமைப்பாளர்கள் உருவாகியுள்ளார்கள். ஆனால் அவர்களுக்கும் இளையராஜாவுக்கும் இடையே உள்ள பெரிய வித்தியாசமே பின்னணி இசையில் இளையராஜாவுக்கு நிகர் அவர் மட்டுமே. இளையராஜா 76 ஆம் ஆண்டு அன்னக்கிளி திரைப்படம் மூலம் அறிமுகமான நிலையில் ஐந்தே ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் நம்பர் 1 இசையமைப்பாளராக ஆனார்.
அதன் பிறகு மிடாஸ் மன்னன் போல அவர் தொட்டதெல்லாம் தங்கமாக மாறின. அந்தளவுக்கு அவர் பாடல்கள் அடுத்த சில தசாப்தங்களுக்கு தமிழர்களை மயக்கியது. அதன் பின்னர் 1992 ஆம் ஆண்டு ரஹ்மானின் வருகைதான் அதன் பிறகு தமிழ் சினிமா இசையின் போக்கை மாற்றியது. அதன் பின்னர் திறமையான இயக்குனர்கள் இளையராஜாவை தேடி செல்லவில்லை. அப்படி சென்ற பாலா போன்ற இயக்குனர்களுக்கு முத்து முத்தான பாடல்களை ராஜா கொடுத்துள்ளார்.
#image_title
அதன்பின்னர் இப்போது அவரை தேடி மிஷ்கின், வெற்றிமாறன், தியாகராஜன் குமாரராஜா போன்ற தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த இசையமைப்பாளர்கள் செல்கிறார்கள். மீண்டும் பிஸியான இசையமைப்பாளராக ஆகியுள்ளார் இளையராஜா. அதுமட்டுமில்லாமல் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் தொடர்ந்து கச்சேரிகளை நடத்தி வருகிறார்.
இளையராஜாவுக்கு தற்போது 82 வயதாகிறது. ஆனாலும் தன்னுடைய கச்சேரிகளில் அவர் 5 மணிநேரம் நின்று கொண்டே அதை நடத்துகிறார். இதுபற்றி ஒரு ரசிகர் அவரிடம் “இந்த 80 வயதிலும் எப்படி 5 மணிநேரம் நின்றுகொண்டே இசைக் கச்சேரி நடத்துகிறீர்கள்? அதற்கான சக்தி எங்கிருந்து உங்களுக்குக் கிடைக்கிறது?” எனக் கேட்டார். அதற்கு சிரித்துக்கொண்டே பதிலளித்த இளையராஜா “அதனாலதான்.. நான் ராஜாடா” எனக் கூறியுள்ளார்.
1500 பயிற்சி அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறித்த செய்தி இடம் பெற்றுள்ளது. தகுதியுள்ள பட்டதாரிகள் இன்று முதல்…
பாரத ஸ்டேட் வங்கி கடந்த நிதியாண்டில் பேப்பர் மற்றும் பேனா உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்களுக்காக மட்டும் ரூ.986 கோடி செலவிட்டுள்ளதாகக்…
போன்பே-ஐ ஒரு வருடம் வரை பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பயனர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட உள்ளது. தொடர்ந்து 12 மாதங்கள் பயன்படுத்தப்படாத…
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, நாடு முழுவதும் 1,500 பயிற்சி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான…
முகேஷ் அம்பானி குடும்பம் முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் வரை அனைவரது வீட்டு விசேஷங்களிலும் தவறாமல் கலந்துகொள்ளும் பிரபலமாக ஓரி வலம்…
திமுகவிலிருந்து செந்தில் பாலாஜி விலகுகிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டு, இதனால் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஒரு செய்தித் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.…