இந்திய திரை உலகில் 40 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடி கோடிக்கணக்கான ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் தான் பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம். பிரபல பின்னணி பாடகரான எஸ்.பி.பாலசுப்ரமணியம் இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என இவர் பாடாத மொழிகளே இல்லை. இவர் பாடகராக மட்டுமல்லாமல் திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கும் இவர் இசையமைத்துள்ளார்.
தமிழ் திரை உலகில் பன்முகத்திறமை கொண்ட கலைஞராக வலம் வந்தவர். இவருடைய குரல் என்பது மூன்று தலைமுறையின் குரல்.அதனால்தான் இவர் 40 ஆண்டுகளுக்கு மேலாக அவர் மறையும் வரை பாடிக் கொண்டே இருந்தார். தமிழ் திரை இசை ரசிகர்களால் பாடும் நிலா பாலு என்ற அன்புடன் அழைக்கப்பட்ட பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம் கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். இவருடைய மறைவு ஒட்டுமொத்த ரசிகர்களையும் மீளா துயரத்தில் ஆழ்த்தியது. அவர் இந்த மண்ணுலகை விட்டு பிரிந்தாலும் மக்களின் மனதில் இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார். அவருடைய இசைக்கு மயங்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. அந்த அளவிற்கு தன்னுடைய இசையால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கட்டி போட்டுள்ளார்.
எஸ்பிபி அவருடைய குரலில் முதன் முதலில் பாடிய தமிழ் பாடல் ஆயிரம் நிலவே வா என்ற பாடல் தான். எம்ஜிஆரின் அடிமை பெண் படத்திற்காக அவர் இந்த பாடலை பாடினார். ஆனால் இந்த பாடல் உருவானதற்கு பின்னணியில் ஒரு சுவாரஸ்யமான கதையும் உள்ளது. அதாவது ஒரு நாள் ஏவிஎம் ஸ்டூடியோவில் எம்ஜிஆர் தன்னுடைய பட விஷயமாக ஆலோசனைகள் இருந்தபோது அருகே உள்ள செட்டில் தெலுங்கு பட பாடல் கம்போசிங் நடந்து கொண்டிருந்தது. அதில் எஸ் பி பி பாடி கொண்டிருந்தார். அவரின் குரலைக் கேட்டு மெய் மறந்து போன எம்ஜிஆர் யாருப்பா இவ்வளவு அழகா பாடுவது என்று கேட்டுள்ளார். அவரை நேரில் அழைத்து தனது படத்தில் நீ கண்டிப்பா பாடணும் என்று எம்ஜிஆர் கூறினார்.தமிழில் முதல் பாடலை எம்ஜிஆர் பாடல் என்பதால் எஸ்பிபி மிகுந்த சந்தோஷத்தில் இருந்து உள்ளார்.
ஆனால் மறுநாள் அவருக்கு டைபாய்டு காய்ச்சல் வந்ததால் அந்த பாடல் பாட முடியாமல் போனதாம். இதனால் அவர் சோகத்தில் இருந்துள்ளார். அப்போ நீ ஒன்னும் கவலைப்படாத. இந்த பாடலை நீ தான் பாட போகிறாய் , உனக்கு உடல்நலம் சரியாகும் வரை காத்திருந்து அதன் ரெக்கார்டிங்கை வைத்துக் கொள்கிறோம் என்று எம்ஜிஆர் சொல்லியுள்ளார். இப்படி SPB இசை பயணத்தை தமிழில் தொடங்கி வைத்த பாடல் தான் எம்ஜிஆரின் அடிமைப்பெண் படத்தில் இடம்பெற்ற ஆயிரம் நிலவே வா பாடல். அவரின் பாடலுக்காக எம்ஜிஆர் சுமார் இரண்டு மாதங்கள் வரை காத்திருந்தே பிறகு ரெக்கார்டு செய்யப்பட்ட இந்த பாடல் இன்றுவரை தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்துள்ளது என்று சொன்னால் மிகை ஆகாது.
1500 பயிற்சி அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறித்த செய்தி இடம் பெற்றுள்ளது. தகுதியுள்ள பட்டதாரிகள் இன்று முதல்…
பாரத ஸ்டேட் வங்கி கடந்த நிதியாண்டில் பேப்பர் மற்றும் பேனா உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்களுக்காக மட்டும் ரூ.986 கோடி செலவிட்டுள்ளதாகக்…
போன்பே-ஐ ஒரு வருடம் வரை பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பயனர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட உள்ளது. தொடர்ந்து 12 மாதங்கள் பயன்படுத்தப்படாத…
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, நாடு முழுவதும் 1,500 பயிற்சி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான…
முகேஷ் அம்பானி குடும்பம் முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் வரை அனைவரது வீட்டு விசேஷங்களிலும் தவறாமல் கலந்துகொள்ளும் பிரபலமாக ஓரி வலம்…
திமுகவிலிருந்து செந்தில் பாலாஜி விலகுகிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டு, இதனால் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஒரு செய்தித் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.…