அடிக்கடி Negative Thoughts வருகிறதா…? இந்த பழக்கங்களை கடைபிடிங்க…

By admin on தை 20, 2025

Spread the love

எப்போதுமே ஒரு பிரச்சனை என்று வந்துவிட்டால் நம் மூளை இரண்டு விதமாக யோசிக்கும். ஒன்று அதீத பாசிட்டிவா சிந்திக்கும் அல்லது அந்த பிரச்சனைக்கு அடிமட்டமாக நெகட்டிவாக நம் மூளை சிந்திக்கும். இதை பேலன்ஸ் செய்வது கடினம். ஒரு சிலர் மனதையும் மூளையும் கண்ட்ரோலாக வைத்திருப்பார்கள். அவர்கள் சிந்திப்பது பாசிட்டிவாக இருக்கும். ஆனால் ஒரு சிலர் சிறிய விஷயத்திற்கு டென்ஷன் ஆகி விடுவார்கள். அவர்கள் அதிகமாக நெகட்டிவாக தான் சிந்திப்பார்கள். நெகட்டிவ் ஆக சிந்திக்கும்போது நமக்கு பயம் பதட்டம் பாதுகாப்பில்லாத உணர்வு தேவையில்லாத டென்ஷன் போன்றவை ஏற்படும். அப்படி இந்த Negative Thoughts உங்களுக்கு வரும்போது அதை மாற்றிக்கொள்ள என்ன செய்யலாம் என்பதை பற்றி இனி காண்போம்.

   

தினமும் காலையில் எழும்பும்போது இன்றைய நாள் நன்றாக இருக்கும் நான் பாசிட்டிவ் ஆகவே ல்லாவற்றையும் சிந்திப்பேன் என்று நினைத்துக் கொண்டே விழியுங்கள். அதுமட்டும் இல்லாமல் உங்கள் வாழ்வில் நடந்த நல்ல விஷயங்களை நினைத்து பாருங்கள். இது உங்களது நாளை பாசிடிவ் ஆக வைக்க உதவும். தினமும் ஒரு பத்து நிமிடங்கள் நீங்கள் டைரி என்று தனியாக வைத்துக்கொண்டு அதில் அன்றைய நாளில் நல்லவையாக பாசிட்டிவாக நடந்தவைகளை எழுதும் போது உங்களுக்கு பாசிட்டிவ் எண்ணங்கள் அதிகரிக்கும்.

   

அதேபோல் நீங்கள் எந்த பிரச்சனையானாலும் ஏதாவது ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் உங்களுக்குள்ளே நீங்கள் சொல்லிக் கொள்ள வேண்டும் எனக்கு மன உறுதி அதிகம் இதுவும் கடந்து போகும் என்னால் சமாளிக்க முடியும் என உங்களுக்கு நீங்களே சொல்லிக் கொள்ள வேண்டும். எப்போதுமே உங்களது மனதிற்குள் Negative Thoughts மேலோங்கும் போது அதை கட்டுப்படுத்த அதற்கு நேர்மறையாக நீங்கள் சொல்ல வேண்டும். என்னால் இதை செய்ய முடியாது என்று உங்களுக்கு எண்ணம் தோன்றினால் அதற்கு எதிர்மறையாக இருக்கும் இது கடினமானது தான் ஆனால் என்னால் செய்து முடிக்க முடியும் என்று நீங்கள் உங்களை தேற்றிக் கொள்ள வேண்டும்.

 

உங்களை சுற்றி யாராவது நெகடிவாக பேசுபவர்கள் இருந்தாலும் அவர்களிடம் இருந்து தள்ளி இருங்கள். நெகட்டிவிட்டி கொடுக்கும் விஷயங்களில் இருந்து தள்ளி இருங்கள். ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். உங்களையே ரெஃப்ரெஷ் செய்துகொள்ள உங்களுக்கு விருப்பமான இடத்திற்கு செல்லலாம் உங்களுக்கு விருப்பமான உணவுகளை நீங்கள் ஆர்டர் செய்தோ அல்லது சமைத்தோ சாப்பிடலாம் இப்படி நெகட்டிவான விஷயங்களை இருந்து நீங்கள் தள்ளி இருக்கும் போது பாசிட்டிவ் எண்ணங்கள் வரும். தினமும் பாசிட்டிவான எண்ணங்களை சிந்தித்து ஒரு ஐந்து நிமிடங்கள் தியானம் செய்யுங்கள். இது உங்கள் மனதையும் மூளையும் வலுப்படுத்தி நல்ல சிந்தனைகளை மட்டுமே ஏற்படுத்தும். இவைகளை கடைபிடிக்கும்போது உங்களால் Negative Thoughts இல் இருந்து வெளிவர முடியும்.