இந்த 6 பழக்கத்தை மட்டும் உங்கள் வாழ்க்கையில் கடைபிடிங்க… அப்புறம் நீங்க தான் ராஜா…

By admin on தை 27, 2025

Spread the love

ஒரு சிலருக்கு நல்ல குணங்கள் அதிகமாக இருக்கும். ஒரு சிலருக்கு கெட்ட குணங்கள் அதிகமாக இருக்கும். எல்லோரும் அப்படியே இருந்து விடுவதில்லை. தங்களது பழக்கவழக்கங்களை மாற்ற வேண்டும் என்று விரும்புவார்கள். அப்படியே நாம் ஒரு பழக்கத்தை மாற்ற வேண்டும் அல்லது புதிய பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்றால் 21 நாட்கள் அதை கடைபிடித்தால் அது கண்டிப்பாக மாறும் என்று கூறப்படுகிறது. அது போல ஒரு ஆறு பழக்கங்களை நீங்கள் தொடர்ந்து கடைபிடித்தால் உங்கள் வாழ்க்கை உயரும் வெற்றிகரமான வாழ்க்கையை நடத்த முடியும் அது என்ன என்பதை பற்றி இனி காண்போம்.

   

முதலில் நல்ல தூக்கம். தினமும் 7 முதல் 9 மணி நேரம் நன்றாக தூங்குவதற்கு முயற்சி செய்யுங்கள். தூங்கும்போது செல்போனை தள்ளி வைத்து விடுங்கள். யாருக்காகவும் உங்கள் தூக்கத்தை தியாகம் செய்யாதீர்கள். நீங்கள் நன்றாக உறங்கினால் உங்கள் உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு உங்களது வேலைகளில் கவனம் செலுத்த முடியும் உடல் சுறுசுறுப்பாக இருக்கும்.

   

அடுத்ததாக தினம்தோறும் எதாவது ஒரு புதிய விஷயத்தை கற்றுக் கொண்டே இருங்கள். அப்போதுதான் தொழில் ரீதியாகவும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் உங்களால் வளர்ச்சி பெற முடியும். அடுத்ததாக தினமும் காலையிலோ அல்லது மாலையிலோ 30 நிமிடங்கள் உங்கள் மனதை உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க உடற்பயிற்சி, யோகா, நடை பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ளுங்கள். இதை தினமும் கடைபிடிக்கும் போது உங்கள் உடல் பிட்டாக இருப்பதோடு நோய் வராமல் தடுக்க முடியும்.

 

அடுத்ததாக தினமும் ஒரு பத்து நிமிடம் அமைதியான சூழலில் அமர்ந்து கண்களை மூடி தியானம் செய்யுங்கள். அன்றைய தினத்தில் நடந்த நல்லவைகள் என்ன எது மாற்ற வேண்டியது என எல்லாவற்றையும் சிந்தித்து திட்டமிடுங்கள். மன அழுத்தத்தை குறைப்பதற்கு இந்த தியானம் என்பது பெரிதாக உதவும். உங்களது உணர்ச்சிகளை கட்டுப்படுத்தவும் தியானம் உதவுகிறது. அடுத்து சேமிப்பு மற்றும் முதலீடு. உங்களது மாத வருமானம் எவ்வளவு எதற்கெல்லாம் செலவு செய்ய வேண்டும் எது தேவையில்லாமல் செலவாகிறது என்பதை தெரிந்து பட்ஜெட் போட்டு உங்கள் வாழ்க்கையை நடத்தும் போது உங்களால் பெரிதளவில் பணத்தை சேமிக்க முடியும்.

இறுதியாக முறையான திட்டமிடல். உங்களது வாழ்க்கையில் ஒரு திட்டமிடல் இருக்க வேண்டும். தினமும் இன்றைய நாள் என்ன செய்யப் போகிறோம் அடுத்த வாரம் என்ன செய்யப் போகிறோம் இதை நாம் கண்டிப்பாக செய்தாக வேண்டும் என்ற இலக்கு நிர்ணயித்து ஒவ்வொரு விஷயத்தையும் திட்டமிட்டு செய்யும் போது அதில் உங்களுக்கு வெற்றி வாய்ப்பு என்பது அதிகமாக இருக்கும். இது போன்ற விஷயங்களை நீங்கள் கடைபிடித்தால் ஒரு வெற்றிகரமான வாழ்க்கையை உங்களால் வாழ இயலும்.