மத்திய அரசின் Free Laptop Scheme… மாணவர்கள் இதில் எப்படி விண்ணப்பிகலாம் தகுதி என்ன…முழு விவரங்கள் இதோ…

By admin on தை 27, 2025

Spread the love

பொது மக்களுக்காகவும் மாணவர்களுக்காகவும் மத்திய அரசு பல திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது. அதில் ஒன்றுதான் மாணவர்களுக்கான இலவச லேப்டாப் திட்டம். ஒரு மாணவர் ஒரு மடிக்கணினி யோஜனா 2024 என்பது மத்திய அரசின் அகில இந்திய தொழில் நுட்ப கல்வி கவுன்சில் AICTE மூலம் நிர்வகிக்கப்படும் ஒரு திட்டமாகும். இந்தத் திட்டத்தில் எப்படி விண்ணப்பிப்பது மாணவர்கள் எப்படி இலவச லேப்டாப் வாங்குவது என்பதை பற்றிய முழு விவரங்களை இனி காண்போம்.

   

இந்த மத்திய அரசின் ஒரு மாணவர் ஒரு மடிக்கணினி யோஜனா திட்டத்தில் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவுகளை சேர்ந்த மாணவர்களுக்கு குறிப்பாக இளங்கலை உயர்நிலைப் படிப்புகள் தொழில்துறை படிப்புகளை தொடரும் மாணவர்கள் இலவச மணிக்கணினிகளை பெற்றுக் கொள்ளலாம். டிஜிட்டல் கற்றல் முறைகளை நலிவடைந்த மாணவர்களுக்கு கிடைப்பதை உறுதி செய்தல் என்பது இந்த திட்டத்தை நோக்கமாகும்.

   

இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கான லேப்டாப் வாங்கக்கூடிய உரிய நிதியை மத்திய மாநில அரசுகள் செலுத்தும். இந்த இலவச லேப்டாப்பை பெறுவதற்கு மாணவர்கள் உயர்நிலைப் பள்ளிகள் இளங்கலை கல்லூரிகள் டிப்ளமோ படிப்புகள் அல்லது தொழில் முறை திட்டங்கள் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்துக் கொண்டிருக்க வேண்டும்.

 

இந்த இலவச லேப்டாப்பிற்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ 2,50,000 க்கு மேல் இருக்கக் கூடாது. இதை விண்ணப்பிக்கும் மாணவர்களின் குடும்பமானது இந்த திட்டத்தை செயல்படுத்தும் மாநிலத்தில் நிரந்தர குடியிருப்பாளர்களாக இருக்க வேண்டும். வேறு திட்டத்தின் கீழ் ஏற்கனவே மடிக்கணினி வாங்கி இருந்தால் அவர்கள் இந்த இலவச லேப்டாப்பை பெறுவதற்கு தகுதி அற்றவர்கள் ஆவார்கள்.

இந்த இலவச லேப்டாப் திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் மத்திய அரசின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்துக்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். மாணவர்கள் படிக்கும் கல்லூரியில் இந்த திட்டம் இருக்கிறதா என்று கேட்டு தெரிந்து ஆஃப்லைனிலும் விண்ணப்பிக்கலாம். இந்த திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கு தேவையான ஆவணங்கள் கல்வி சான்றிதழ் ஆதார் கார்டு வங்கி கணக்கு புத்தகம் ஜெராக்ஸ் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் வருமானவரி சான்றிதழ் ஆகியவை சமர்ப்பிக்க வேண்டும்.