eyes

அதிக நேரம் கம்ப்யூட்டரில் வேலை செய்கிறீர்களா…? கண்களை பாதுகாக்கும் டிப்ஸ் இதோ…

By Meena on நவம்பர் 6, 2024

Spread the love

இன்றைய காலகட்டத்தில் பலருக்கும் வேலை கம்ப்யூட்டரில் தான் இருக்கிறது. ஏனென்றால் தொழில்நுட்பம் வளர்ந்து விட்டதால் பலர் கம்ப்யூட்டரில் வேலை செய்து தான் ஆக வேண்டும். ஆனால் இந்த கம்ப்யூட்டரில் இருந்து வரும் வெளிச்சம் நம் கண்ணை பாதிக்கக் கூடியது. அதிலிருந்து வரும் நீல நிற கதிர்களில் இருந்து நம் கண்ணை பாதுகாக்க வேண்டியது அவசியம். அப்படி கம்ப்யூட்டரில் நாள் முழுதும் வேலை பார்ப்பவர்கள் கண்களை பாதுகாப்பது எப்படி என்பதைப் பற்றி இனி காண்போம்.

   

கம்ப்யூட்டரில் நீங்கள் வேலை பார்க்கும் போது அவ்வப்போது ஓய்வெடுக்க வேண்டும். 20 நிமிட இடைவேளையில் 20 நொடிகள் கம்ப்யூட்டரை பார்க்காமல் வேறு எங்கேயாவது நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும் அல்லது கண்களை மூடிக்கொண்டு ஒரு 20 நொடிகள் இருக்கலாம். கணினியில் அதிக நேரம் வேலை பார்க்கும் போது அடிக்கடி கண் சிமிட்டுங்கள் இதுவும் மிகவும் நல்லது.

   

அதேபோல் கணினியில் வேலை பார்க்கும் போது அதிகப்படியான பவர் வெளிச்சத்தை வைத்து வேலை பார்க்காதீர்கள். வெளிச்சத்தை குறைத்து வைத்து பயன்படுத்துங்கள். முடிந்தவரை கம்ப்யூட்டர் கண்ணாடி என்று விற்கப்படுகிறது. இது நீல நிறக்கதிர்களை தடுக்கிறது. அதை வாங்கிக்கொண்டு அணிந்தாலும் கண்கள் பாதிப்படைவதில் இருந்து தடுக்கலாம்.

 

தொடர்ந்து கம்ப்யூட்டரில் பார்த்து பணி செய்யும்போது கண்கள் அசந்து போகும். அதனால் முகம் கழுவலாம் தண்ணீர் அதிகமாக பருகலாம் அடிக்கடி இரவு நேரங்களிலோ அல்லது ப்போது நேரம் கிடைத்தாலும் ஐஸ் கட்டி வைத்து கண்களை சுற்றி ஒத்தடம் கொடுக்கும்போது அது கண்களின் நரம்புகளில் சற்று தளர்ச்சி அடைய செய்யும். இது போன்ற வழிமுறைகளை பின்பற்றும்போது கணினியில் அதிக நேரம் வேலை செய்வதால் ஏற்படும் கண் பாதிப்புகளில் இருந்து தப்பிக்கலாம்.