திருமண பந்தம் என்பது ஒரு நீண்ட கால பயணம். கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு விட்டுக் கொடுத்து வாழும் போது தான் அந்த பந்தம் நெடுந்தூரம் நிலைக்கும். அப்படி ஒத்து வராத போது தான் விவாகரத்து என்பது ஏற்படுகிறது. நம் பாட்டி தாத்தா காலத்தில் அதிகப்படியாக அட்ஜஸ்ட் செய்து வாழும் குணம் இருந்தது. இப்போதைய இளம் தலைமுறைக்கு பொறுமை இல்லை. சின்ன விஷயமானாலும் விவாகரத்து என்று முடிவெடுத்து விடுகிறார்கள். தற்போது ஒரு கணவர் இந்தெந்த குணாதிசயங்களை கொண்டிருந்தால் அவர் நல்ல கணவர் தான் அவர்கள் திருமண பந்தம் இறுதிவரை நீடிக்கும். அந்த நல்ல கணவருக்கான குணங்கள் என்னென்ன என்பதை பற்றி இனி காண்போம்.
ஒரு பெண் தனது கணவரிடம் பாதுகாப்பான ஒரு உணர்வைப் பெற்றால் எந்த சூழலிலும் உங்களது கருத்துக்களை வெளிப்படையாக கூற முடிந்தால் அந்தக் கணவர் அவரை நல்ல முறையில் வைத்திருக்கிறார் என்பது அர்த்தம்.
ஒரு திருமண பந்தம் நீடிப்பதற்கு அனுசரணை மிகவும் முக்கியம். ஒரு நல்ல கணவரானவர் தவறுகளை ஒப்புக்கொள்ள தயங்க மாட்டார். நீங்கள் தவறுகளுக்கு மன்னிப்பு நேரடியாக கேட்பவராக இருக்கலாம் உங்களின் மன உணர்வுகளை வெளிப்படையாக கூறுபவராக இருந்தால் நீங்கள் நல்ல கணவர் தான்.
ஒரு கணவர் தனது மனைவி வழி உறவினர்கள் நண்பர்கள் ஆகியோரிடம் நல்ல ஒரு பந்தத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும். குடும்ப மற்றும் பொது நிகழ்ச்சிகளில் நீங்கள் பங்கேற்பதன் மூலம் உங்கள் மனைவியை மதிக்கிறீர்கள் நல்ல முறையில் வைத்திருக்கிறீர்கள் என்பது அர்த்தமாகும்.
ஒரு நல்ல கணவர் தனது மனைவிக்கு எது பிடிக்கும் பிடிக்காது என்பதை தெரிந்து வைத்துக் கொண்டு அவர்களுக்கு பிடிக்காதவற்றை தவிர்க்கும் பட்சத்தில் நீங்கள் ஒரு நல்ல கணவர் தான் என்பது உலகுக்கு தெரியும். உங்கள் துணையின் தேவைகள் மற்றும் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கு ஏற்பட்டவாறு நடக்கும் போது நீங்கள் ஒரு நல்ல கணவர் உங்களது திருமண பந்தத்தில் எந்த ஒரு விரிசலும் ஏற்படாது என்பது அர்த்தம். இது போன்ற குணாதிசயங்களை நீங்கள் கொண்டிருந்தால் நீங்கள் நல்ல கணவர் தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.