ஐபோனுக்கு அடுத்ததாக தற்போது அதிகப்படியான மக்கள் விரும்பும் பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான OnePlus தற்போது புதிய பிளாஷிப் ஸ்மார்ட்போன் ஆன OnePlus 13 மற்றும் OnePlus 13R ஆகியவற்றை இந்தியாவில் அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதன் சிறப்பம்சங்கள் என்ன இதன் விலை என்ன போன்ற விரிவான தகவல்களை இனி காண்போம்.
OnePlus 13 R ஸ்மார்ட்போன் snapdragon 8 gen 3 சிப்செட் உடன் வருகிறது. 14 gb வரையிலான ram இருக்கிறது. 6000 mah பெரிய பேட்டரியை கொண்டுள்ளது. இதுவரை எந்த ஒரு மலிவு விலை OnePlus ஃபோனிலும் இல்லாத மிகப் பெரிய பேட்டரியை இந்த ஸ்மார்ட்போன் கொண்டு வருகிறது.
இந்த OnePlus 13R ஸ்மார்ட்போன் 6.78 இன்ச் AMOLED டிஸ்ப்ளே கொண்டு இருக்கிறது. 120 hz புதுப்பிப்பு வீதம் 4500 நீட்ஸ் உச்சபிரகாசம் தட்டையான டிஸ்ப்ளே கார்னிங் கொரில்லா கிளாஸ் 7i கொண்டு வருகிறது. மேலும் இந்த ஸ்மார்ட் போன் IP65 தர மதிப்பீட்டையும் கொண்டு வருகிறது.
கேமராவை பொறுத்தவரையில் 50mp பிரதான கேமரா 50 மெகாபிக்சல் டெலிபோர்டோ லென்ஸ் 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் லென்ஸ் கொண்டிருக்கிறது. செல்ஃபி எடுக்க இந்த போனில் 16 மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது. 100 வாட் சூப்பர் வாக் சார்ஜிங் கொண்டு வருகிறது. இதனால் பயனர்கள் தொலைபேசியை மிக விரைவாகவே சார்ஜ் செய்து கொள்ளலாம்.
இந்த OnePlus 13R ஸ்மார்ட்போன் 12 ஜிபி ராம் 286 gb சேமிப்புடன் வரும் வேரியண்ட் விலை ரூ 42,999 ஆகும். அதே நேரத்தில் 16 ஜிபி ராம் 512gb சேமிப்பு கொண்ட மாடலின் விலை ரூபாய் ரூ 49,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனையானது ஜனவரி 13 முதல் தொடங்கும் அமேசான் ஒன் பிளஸ் இந்தியா இணையதளம் மற்றும் நாடு முழுவதும் உள்ள ரீடைல் ஸ்டோர்களில் வாடிக்கையாளர்கள் வாங்கிக் கொள்ளலாம்.