அதிகமா செலவு செய்யும் பழக்கம் கொண்டவரா நீங்கள்… உங்கள் சேமிப்பை அதிகரிக்க இப்படி Plan பண்ணுங்க…

Spread the love

இன்றைய காலகட்டத்தில் சேமிப்பு இல்லாமல் வாழ்க்கை நடத்துவது மிகவும் கஷ்டம். அதனால் திட்டமிட்டு சேமிப்பது என்பது அத்தியாவசியமானது. விலைவாசி உயர்வு, கல்வி, மருத்துவம் என பல செலவுகள் போக சேமிப்பு இருந்தால் தான் நல்லதொரு வாழ்க்கையை நம்மால் ஏற்படுத்திக் கொள்ள முடியும். ஆனால் ஒரு சிலருக்கு பணத்தை அதிகம் செலவு செய்யும் பழக்கம் இருக்கும். அப்படிப்பட்டவர்கள் பணத்தை சேமிக்க வேண்டும் என்று விரும்பினாலும் கூட அவர்களால் முடியாது. ஒரு சில எளிமையானழிமுறைகளை பின்பற்றும்போது உங்களால் பணம் சேமிக்க முடியும். அது என்னென்ன என்பதை பற்றி இனி காண்போம்.

முதலில் உங்களை எது உடனடியாக அதிக செலவு செய்ய வைப்பது என்பதை கண்டுபிடிங்கள். ஒன்று ஆன்லைன் ஷாப்பிங் ஆக இருக்கலாம். இல்லை நண்பர்களுடன் வெளியில் செல்வது போன்றவை இருக்கலாம். அவற்றை கண்டறிந்து அதில் எதை குறைக்க முடியும் என்பதை பார்த்து திட்டமிடுங்கள்.

மாத சம்பளம் கையில் வந்த உடனேயே ஒரு பட்ஜெட்டை தயார் செய்து கொள்ளுங்கள். அத்தியாவசிய செலவுகள் உங்களுடைய விருப்பமான செலவுகள் போன்றவற்றை திட்டமிடுங்கள். அப்போது உங்களுக்கு தேவையற்ற செலவு என்ன என்பதை உங்களால் கண்டறிந்து கொள்ள முடியும். அதை குறைப்பதன் மூலம் உங்களால் பணத்தை எளிதாக சேமிக்க முடியும்.

நாம் நிறைய பொருட்கள் வாங்க வேண்டும் என்று ஆசைப்படுவோம். ஆனால் பெரும்பாலான பொருட்கள் நம் வீட்டில் சும்மா ஏதோ ஒரு ஓரத்தில் இருந்து கொண்டிருக்கும். அதனால் ஒரு பொருளை கண்டவுடன் வாங்கும் பழக்கத்தை கைவிட்டு விட்டு உண்மையாக அந்த பொருளினால் நமக்கு பயன்பாடு இருக்கிறதா என்று யோசனை செய்து வாங்குங்கள். தேவையில்லாத பணத்தை செலவு செய்வதை குறைக்க போன் பே, கூகுள் பே போன்றவற்றை உபயோகப்படுத்தாமல் கையில் பணத்துடன் சென்று நீங்கள் ஷாப்பிங் செய்யுங்கள். நம் கையால் பணத்தை கொடுக்கும் போது நாம் எவ்வளவு கொடுக்கிறோம் என்பது நமக்கு தெரியும். போன் மூலமாக ஜிபே போன்றவற்றை நாம் பயன்படுத்தும் போது அதன் வேல்யூ நமக்கு தெரியாமல் போகலாம்.

இதுபோல வெளியூர் பயணங்கள் மருத்துவ செலவு போன்றவற்றிற்கும் திட்டமிடுதல் என்பது மிகவும் முக்கியமானது. நாம் மிகவும் கட்டுப்பாடோடு இருக்க வேண்டும் என்று சொல்லவில்லை. வாழ்க்கை வாழ்வதற்கு தான். அதற்கு ஏற்றார் போல் சிறுசேமிப்பும் மிகவும் அத்தியாவசியமானது. நாம் திட்டமிட்டு நம்மளுடைய வருமானத்தை செலவு செய்யும்போது நாம் நினைத்ததை விட அதிகப்படியான பணத்தை நம்மால் சேமிக்க இயலும். ஒரு முறை இதை முயற்சி செய்து பார்த்து விட்டால் அடுத்தடுத்து நமக்கு அதே பழக்கம் ஆகிவிடும். அதனால் இனி இந்த வழிமுறைகளை பின்பற்றினால் கண்டிப்பாக உங்களாலும் பணத்தை சேமிக்க முடியும்.

admin

Recent Posts

முதல்வர் விஜய்யால் சேப்பாக்கத்தில் பரபரப்பு.. ரசிகர்களுக்கு CSK விதித்த அதிரடி தடை – ரசிகர்கள் அதிர்ச்சி..!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவரான விஜய், தமிழக முதல்வராகப் பதவியேற்றுள்ள சூழலில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள சிஎஸ்கே மற்றும்…

2 minutes ago

“சி. ஜோசப் விஜய் எனும் நான்…” – தமிழகத்தையே அதிர வைக்கப்போகும் அந்த ஒற்றை வாசகம்… பதவியேற்பு விழா இப்படி தான் நடக்கும்.. ரூல்ஸ் இதுதான்…!

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் இன்று தொடங்குகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், இன்று (ஞாயிற்றுக்கிழமை)…

8 minutes ago

விஜய் அமைச்சரவையில் செங்கோட்டையனுக்கு ‘பவர்ஃபுல்’ பதவி.. அதிர வைக்கும் தவெக-வின் உத்தேச அமைச்சரவை பட்டியல்..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) உத்தேச அமைச்சரவை பட்டியல் குறித்த தகவல் தற்போது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

10 minutes ago

“செங்கோட்டையன் முதல் ராஜ்மோகன் வரை”… யார் இந்த அந்த 8 அமைச்சர்கள்?… விஜய்யின் ‘மாஸ்டர் பிளான்’ பின்னணியில் இருக்கும் ரகசியம்…!

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் இன்று தொடங்குகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், இன்று காலை…

13 minutes ago

விஜய் கோட்டையில் காங்கிரஸ் கால் தடம்… 2 அமைச்சர் பதவிகளுடன் அதிரடியாக களமிறங்கும் கூட்டணி ஆட்சி..!!!

தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தலைமையில் புதிய அரசு அமையவுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி நிபந்தனையுடன் கூடிய…

18 minutes ago

மாஸ்டர் மைண்ட் நெஹ்ரா! சிராஜுக்குத் தலை காட்டி சைகை… அடுத்த பந்திலேயே அவுட்டான 15 வயது வைபவ்.. வைரல் வீடியோ..!!

ஐபிஎல் 2026 தொடரில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில், 15 வயது இளம் வீரர்…

18 minutes ago