நம் வாழ்வில் அன்றாடம் பலவித மனிதர்களை சந்திப்போம். பல மனிதர்களை கடந்து வருவோம். ஒரு சில மனிதர்கள் நம் கூடவே சேர்ந்து பயணிப்பார்கள். அது அலுவலகத்தில் இருக்கலாம், நண்பர்களாக இருக்கலாம் அல்லது நம் அண்டை வீட்டார்களாக இருக்கலாம். ஆனால் ஐந்து விரல்களும் ஒன்றாக இருப்பதில்லை என்பது போல எல்லா மனிதர்களும் ஒன்றாக இருப்பதில்லை. ஒவ்வொருவரும் வேறு வேறு குணம் கொண்டிருப்பார்கள். அதில் ஒரு சிலர் குறிப்பாக Ego கொண்டு இருப்பார்கள். அவர்களை சமாளிப்பது மிகவும் கஷ்டமாக நமக்கு இருக்கும். ஒரு சில காரணங்களால் அலுவலகத்தில் கூட இருக்கலாம் அவங்களை விட்டு நம் நிரந்தரமாக தள்ளி வர முடியாது. அப்படிப்பட்ட Ego பிடித்த மனிதர்களை எப்படி சமாளிக்கலாம் என்பதை பற்றி இனி காண்போம்.
முதலில் Ego பிடித்தவர்கள் அவர்கள் பேச்சுக்களின் மூலம் நாம் செய்கைகளையோ எதையாவது தேவையில்லாமல் இழுத்து நம்மை கோபப்பட வைப்பார்கள். ஆனால் அந்த நேரத்தில் நாம் கோவப்படாமல் எதுவும் ரியாக்ட் செய்யாமல் அமைதியாக இருக்க வேண்டும். கோபப்பட்டு விட்டால் அவர்கள் நினைத்ததை சாதித்தது போல் ஆகிவிடும். நம்மை டென்ஷன் ஆக்கி விட வேண்டும் என்பதே அவர்கள் எண்ணமாக இருக்கும். நாம் கூலாக இருந்து பதிலடி தரலாம்.
Ego பிடித்தவர்கள் நம்மிடம் சண்டை இடுவார்கள். அவர்களது எல்லையைத் தாண்டி நம் வளையத்திற்குள் வருவார்கள். அப்போது அவர்களிடம் சண்டை இடுவது புத்திசாலித்தனம் கிடையாது. மேலும் நமது எல்லையை தாண்டி வரும்போது உடனடியாக ஏதாவது சொல்லி அவர்களை நிறுத்த சொல்லிவிட வேண்டும். Ego பிடித்தவர்கள் அனைவரும் கெட்டவர்களாக இருப்பதில்லை. அவர்களிடம் சில நல்ல குணங்கள் இருக்கும். அவர்கள் ஏதாவது நல்ல விஷயங்கள் செய்தால் அதை நாம் பாராட்டும் போது அவர்களது பண்பு நம்மிடம் வெளிப்படுவது சற்று குறையும்.
Ego பிடித்த நபர் ஒருவர் உங்களது பர்சனல் விஷயங்களை எடுத்து மனதை புண்படுத்தும் வகையில் கூறினால் அதை பர்சனலாக எடுத்துக்கொள்ள வேண்டாம். அப்படிப்பட்ட குணம் படைத்தவர்கள் அவர்கள் வார்த்தையின் மூலமாக அவர்கள் அழுக்கானவர்கள் என்பதை காட்டுகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அவர்களிடம் கூடிய மட்டும் அளவோடு பேசிக் கொள்வது நல்லது மேலும் அவர்கள் மிகவும் உங்களிடம் மட்டுமே டார்கெட் ஆக டாக்சிக்காக பேசினால் அவர்களிடம் முடிந்த வரையில் விலகி இருக்கவே கற்றுக் கொள்ளுங்கள். சந்தர்ப்ப சூழ்நிலையால் பேச வேண்டிய தேவைகளின் போது மட்டும் அவர்களிடம் பேசிக் கொள்ளுங்கள்.