தித்திக்கும் தேன்…. சூடுபடுத்தினால் விஷமாக மாறி விடுமா? – மருத்துவ விளக்கம் சொல்வது என்ன?

By Elango on மார்கழி 14, 2025

Spread the love

தித்திக்கும் தேன் அனைவருக்கும் பிடித்தமான ஒன்றுதான். சிலர் தேனை சூடுபடுத்தி சாப்பிடுவார்கள். இப்படி சாப்பிடுவதால் அது உடலுக்கு ஊட்டச்சத்துக்களை கொடுக்குமா அல்லது பாதிப்பை ஏற்படுத்துமா என்பதை உணவியல் நிபுணர் சோனியா சவுத்ரி விளக்கியுள்ளார். தேன் பல மருத்துவ மருத்துவ குணங்களைக் கொண்டது. இது இதய ஆரோக்கியத்தை காக்கவும் ரத்த ஓட்டத்தை சீராக்கவும் செரிமான மண்டலத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் தேனில் நிறைந்திருப்பதால் உடலுக்கு அதிக நன்மைகள் தருகிறது. மேலும் இது உடலுக்கு உடனடி ஆற்றல் அளிக்கும் தன்மை கொண்டது. தேனை அப்படியே சாப்பிடுவது நல்லது. தேனை லேசாக சூடாக்கி அல்லது வெதுவெதுப்பான நீரில் கலந்து சாப்பிட்டால் அது முற்றிலும் பாதுகாப்பானது என்று உணவியல் நிபுணர் சோனியா சவுத்ரி கூறுகிறார். ஆனால் தேனை அதிகமாக சூடாக்குவது அதன் இயற்கையான பண்புகளை இழக்க செய்யும். இதன் மூலம் நல்ல பயன்களைத் தரும் தன்மையை தேன் இழந்து விடும்.

   

தேனை 40 டிகிரி செல்சியஸ்க்கு மேல் சூடாக்கும்போது அதில் உள்ள ஆக்ஸினேற்றிகள் அழிக்கப்படுகின்றன. இப்படி அதிக சூடாக்கப்பட்ட தேனை சாப்பிட்டால் எந்த நன்மைகளும் இருக்காது. தேனை அதிக வெப்ப நிலையில் சூடுபடுத்தும் போது அது 5- எச்எம்எப் அல்லது 5 – ஹைட்ராக்சி மெத்தில் பர்ஃப்புரல் போன்ற தீங்கு விளைவிக்கும் ரசாயனங்களை உருவாக்கும். இந்த வேதிப்பொருட்கள் உடலில் டிஎன்ஏவை சேதப்படுத்தும். மேலும் புற்றுநோயை கூட ஏற்படுத்தக்கூடும்.

   

லேசான சூடான தேரில் இந்த விளைவு வராது. எனவே இது உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தாது. தேனை அதன் இயற்கையான வடிவத்தில் சாப்பிடுவது சிறந்தது என்று கூறப்படுகிறது. ஒரு ஆரோக்கியமான நபர் ஒரு நாளைக்கு ஒன்று முதல் இரண்டு ஸ்பூன் தேன் சாப்பிடலாம் என்று தலைமை உணவியல் நிபுணர் சோனியா சவுத்ரி கூறியிருக்கிறார்.