ரேஷன் கார்டில் இதை செய்யாவிட்டால் பொங்கல் பரிசு கிடைக்காது..? அதிர்ச்சியில் பொதுமக்கள்… வெளியான உண்மை தகவல்…!!

By Soundarya on மார்கழி 23, 2025

Spread the love

டிசம்பர் 31-க்குள் விரல்ரேகை (KYC) பதிவு செய்யாவிட்டால் ரேஷன் கார்டு ரத்தாகிவிடும் என்றும், இதனால் பொங்கல் பரிசு கிடைக்காது என்றும் ஒரு தகவல் மக்களிடையே வேகமாகப் பரவி வருகிறது. இது குறித்து பொதுமக்கள் கவலைப்படத் தேவையில்லை. மத்திய அரசின் உத்தரவுப்படி, ரேஷன் கடைகளில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் விரல்ரேகை பதிவு (e-KYC) செய்வது அவசியமாகும்.

நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் விரல்ரேகை பதிவு செய்யாதவர்களின் கார்டுகளை ரத்து செய்வது குறித்து தமிழக அரசு இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ முடிவையும் எடுக்கவில்லை. தகுதியுள்ள அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படுவதற்கான பணிகள் தடையின்றி நடைபெற்று வருகின்றன. எனவே, தேவையற்ற வதந்திகளை நம்பி பதற்றமடைய வேண்டாம். அதே சமயம், அரசு வழங்கியுள்ள காலக்கெடுவிற்குள் உங்கள் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளுக்குச் சென்று விரல்ரேகை பதிவை மேற்கொள்வது பாதுகாப்பானது.