உங்க ஸ்மார்ட் ஃபோனில் எல்லாமே மாறிடுச்சா.. மீண்டும் பழைய Call Settings மீட்டெடுக்க இதோ எளிய வழி…!

By Srimathi on ஆவணி 28, 2025

Spread the love

தற்பொழுது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்தும் பயனாளர்களுக்கு, புதிய கால் செட்டிங் மாற்றமடைந்து உள்ளது. இதனை google நிறுவனமே கொண்டு வந்தது. இதற்காக google நிறுவனம் “மெட்டீரியல் 3 எக்ஸ்பிரஸிவ்” டிசைனை அறிமுகப்படுத்தி உள்ளது. இதனால் ஆண்ட்ராய்டு மொபைல் மற்றும் அதன் செயலிகள் புதிய தோற்றத்துடன் காட்சியளிக்கும். முன்பிருந்த செட்டிங்கில் இருந்து, காலிங் இன்டர்பேஸ் மாறி உள்ளது. இந்த இன்டர்பேஸை விரும்பாத பயனிகள் தங்கள் மொபைல் போனை பழைய நிலைக்கு கொண்டு வரலாம்.

  • இதற்கு முதலில் செட்டிங்கை தேர்வு செய்து, ஆப்பை தேர்வு செய்யுங்கள்
  • போன் ஆப்பை தேர்வு செய்யவும்
  • இப்பொழுது ஸ்கிரீனின் வலது பக்க உச்சியில் உள்ள, 3 புள்ளிகளை தேர்வு செய்து, அதில் “அன்இன்ஸ்டால் அப்டேட்ஸ்” என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
  • பின்னர் உங்கள் செய்தியை,  ஃபேக்டரி வெர்ஷனுக்கு மாற்ற வேண்டுமா? என்ற கேள்வி எழுப்பும், அதற்கு ஓகேவை கிளிக் செய்யுங்கள்.

இந்த முறையை பின்பற்றினால், உங்கள் மொபைல் போனில் உள்ள புதிய அப்டேட் நீக்கப்பட்டு, பழைய வர்ஷனுக்கு மாறும்.