“ஒரே அடியில் எல்லாம் சாம்பலாகும்.. உலகமே ஸ்தம்பிக்கும்”…. டிரம்ப் விட்ட மிரட்டல்… பதிலுக்கு ஈரான் வெளியிட்ட அந்த ஆபத்தான ஹிட் லிஸ்ட்….!

By Nanthini on ஆவணி 2, 2026

Spread the love

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானை சரணடைய வைக்கும் நோக்கில் அதன் எரிபொருள் கட்டமைப்பு மையங்கள் மீது தீவிரத் தாக்குதல் நடத்தப்படும் என எச்சரித்திருந்தார். அதற்குப் பதிலளிக்கும் வகையில் ஈரான் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ எச்சரிக்கையில், அமெரிக்காவின் இந்த நடவடிக்கை கடுமையாகத் திருப்பி அடிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

குறிப்பாக, தங்கள் நாட்டின் மீதான தாக்குதலுக்குப் பதிலடியாகக் கத்தார், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் (UAE) மற்றும் குவைத் ஆகிய நாடுகளில் அமைந்துள்ள உலகின் மிக முக்கிய எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி அமைப்புகளை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் பகிரங்கப் பட்டியலை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.