Categories: LIFESTYLE

இட்லி வியாபாரத்தில் இமயம் தொட்ட இனியவன்.. சோதனையை சாதனையாக மாற்றி சாதித்தது இப்படித்தான்..

பிறந்த குழந்தை முதல் பல்போன வயோதிகர்கள் வரை அனைவரும் எந்த பாகுபாடும் இன்றி சாப்பிடக் கூடிய உணவுதான் இட்லி. எளிதில் ஜீரணமாகும் உடலுக்கும் எந்தத் தொந்தரவும் இழைக்காத இட்லிக்கென்று நீண்ட பாரம்பரியம் உண்டு. இந்தியர்களின் உணவுப் பட்டியலில் இட்லிக்கென்று தனி இடம் உண்டு.

இதில் என்ன ஒரு ஸ்பெஷல் என்றால் இட்லிக்கென்று தனி சுவை கிடையாது. எந்தக் குழம்புடன் சேர்த்து சாப்பிடுகிறோமோ அதன் சுவையையும் சேர்த்து தனியாக ஒரு சுவையைக் கொடுக்கக் கூடியது. எனவேதான் இட்லிக்கு அனைத்து குழம்புகளும் செட் ஆகும். பெரும்பாலும் இட்லிக்கு சாம்பாரும், சட்னியும் தான் பயன்படுத்தப்படுகிறது. இவை தவிர பொடி இட்லி மற்றும் விதவிதமான சட்னி அரைத்தும் உண்பர்.

இவ்வாறு இட்லி என்பது நமது அத்தியாவசிய உணவுப் பட்டியலில் இணைந்துள்ளது. இந்த இட்லியை கார்ப்பரேட் பிசினஸாக மாற்றி இன்று கோடிகளில் வர்த்தகம் செய்கிறார் இட்லி இனியவன். கடந்த 1997-ம் ஆண்டு முதல் இட்லி வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறார் இனியவன். பிரபலமானவர்களின் திருமணக்கூடங்களில் இனியவனின் இட்லிக்கு எனத் தனி இடம் உண்டு. காலத்துக்கேற்றாற்போல, சாக்லேட் இட்லி, பீட்ரூட் இட்லி, புதினா இட்லி, இளநீர் இட்லி, சிறுதானிய இட்லிகள் என விதவிதமான பதார்த்தங்களை அறிமுகப்படுத்தியவர்.

#image_title

”அடிச்சான் பாரு அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரு..” வெளியான குரூப் 4 அறிவிப்பு.. வெறிகொண்டு தயாராகும் மாணவர்கள்

இட்லித் தொழிலில் இவர் இந்த அளவிற்குப் பிரபலமாவதற்குப் பின்னால் உள்ள வெற்றிக் கதை இதான். கோவையைச் சேர்ந்தவர் இனியவன் குடும்பம் பெரியது. மூன்று வேளை உணவுக்கும் உத்தரவாதம் இல்லாத குடும்பச் சூழல். மதிய சத்துணவு உதவியோடு 8-ம் வகுப்பு வரை படித்துள்ளார். பதினான்கு வயதில் பாடப்படிப்பை கைவிட்டு பின்பு கோயம்பத்தூரில் ஒரு டி கடையில் வெறும் ஒன்றரை ரூபாய்க்கு வேலைக்கு சேர்ந்தார் நம் இனியவன். ஏன் என்றால் அவர்கள் அவருக்கு உணவு அளித்தனர் என்று ஒரு விழாவில் சொல்லி இருக்கிறார்.

பின்பு ஒரு வாடகை ரிக்ஷாவை வாங்கி அதில் இட்லி விற்று சில நாட்களில் பயணிகளின் மதிப்பை பெற்றார். இவரின் ஒரு வாடிக்கையாளர் பெயர் சந்திரா அம்மா. இந்த சந்திரா அம்மா இட்லிகளை செய்து ஹோட்டல்களுக்கு சப்ளை செய்து வந்தார். அவரின் இட்லி தொழிலை பார்த்துக் கொள்ள சென்னை வந்தார் நம் இனியவன்.

#image_title

உலக விஞ்ஞானிகளுக்கே டாட்டா காட்டிய இந்தியாவின் எடிசன்.. யார் இந்த ஜி.டி.நாயுடு?

சென்னை வந்து தன்னுடைய நாட்களை நினைவு கூறுகையில் “மழை வெள்ளம் என் தொழிலை பாதிப்பு அடைய செய்தது. ஆனாலும் நான் துவண்டு போகாமல் ஒரு நல்ல துணியில் எனது இட்லிகளை எடுத்து கொண்டு ஹோட்டல் ஹோட்டலாக சென்று விற்பேன்” என்கிறார்.

இவ்வாறு இனியவனின் இட்லி மக்கள் மத்தியில் பிரபலம் ஆகத் தொடங்கியிருந்தது. மக்களின் ரசனைக்கு ஏற்ப புதுமைகளைப் புகுத்தி இளநீர் இட்லி, பின்பு பீட்ரூட் இட்லி என பல இட்லி வகைகளை அறிமுகம் செய்தார். பின்பு அவர் உலக சாதனைக்காக 124 கிலா எடையுள்ள இட்லியைத் தயார் செய்து சாதனை படைத்தார். இதுமட்டுமின்றி இரண்டாயிரத்திற்கும் மேல் இவரின் இட்லி வகைகளை அறிமுகம் செய்தார். உலக இட்லி தினம் வர ஒரே காரணம், இவர்தான்.

இவ்வாறு தனது தொழிலை விரிவுப் படுத்தி இன்று பல இளைஞர்களுக்கு முக்கிய ரோல்மாடலாகத் திகழ்கிறார் இட்லி இனியவன்.

 

John

Recent Posts

ஒரு டைரக்டரா, ஒரு அண்ணனா நடிகர் தனுஷுக்கு அட்வைஸ் கொடுத்த செல்வராகவன்… என்ன சொல்லிருக்காரு தெரியுமா..?

ராயன் படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் இயக்குனர் செல்வராகவன் தனது தம்பி மற்றும் நடிகரான தனுஷ் குறித்து பேசிய விஷயங்கள்…

40 நிமிடங்கள் ago

42 லட்சம் மோசடி, பணம் கேட்டு டார்ச்சர்.. ஸ்டுடியோ அதிபர் மீது நடிகர் பார்த்திபன் பரபரப்பு புகார்.. அதிர்ச்சியில் திரையுலகம்..

டீன்ஸ் திரைப்படத்தின் கிராபிக் மேற்பார்வையாளர் மீது பார்த்திபன் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருக்கின்றார். தமிழ் சினிமாவில் பிரபல…

1 மணி நேரம் ago

ஸ்கூல் படிக்கும்போதே தனுஷ் அப்படி தான்.. அவரால தான் நான் 8-வது பாஸ் ஆனேன்.. மனம் திறந்து பேசிய நடன இயக்குனர்..!!

முன்னணி நடிகரான தனுஷின் திருவிளையாடல் ஆரம்பம் படத்தின் மூலம் பாபா பாஸ்கர் நடன கலைஞராக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார்.…

2 மணி நேரங்கள் ago

70 வயசிலும் நிற்க நேரமில்லாமல் ஓடும் உலக நாயகன்.. கமலுக்கு ஆல் இன் ஆல் அழகு ராஜாவாக செயல்படும் நபர்..!!

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். வருகிற 12-ஆம் தேதி இந்தியன்…

16 மணி நேரங்கள் ago

கோடி கோடியா சம்பாதிச்சேன்.. ஆனா இப்போ 200 ரூபாய்க்கு நடிச்சிட்டு இருக்கேன்.. எமோஷனலாக பேசிய நடிகர்..!!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்தவர் TSR தர்மராஜ். முதலில் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று தர்மராஜ் வாய்ப்பு கேட்க…

16 மணி நேரங்கள் ago

முரளி வீட்டில் என் பொண்ண கட்டி கொடுக்க பயந்தேன்.. அந்த ஒரு சம்பவத்தால எல்லாம் மாறிடுச்சு.. மனம் திறந்து பேசிய தயாரிப்பாளர்..!!

80ஸ் 90ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் முரளி. இவருக்கு காவியா என்ற மகளும், அதர்வா,…

16 மணி நேரங்கள் ago