பிறந்த குழந்தை முதல் பல்போன வயோதிகர்கள் வரை அனைவரும் எந்த பாகுபாடும் இன்றி சாப்பிடக் கூடிய உணவுதான் இட்லி. எளிதில் ஜீரணமாகும் உடலுக்கும் எந்தத் தொந்தரவும் இழைக்காத இட்லிக்கென்று நீண்ட பாரம்பரியம் உண்டு. இந்தியர்களின் உணவுப் பட்டியலில் இட்லிக்கென்று தனி இடம் உண்டு.
இதில் என்ன ஒரு ஸ்பெஷல் என்றால் இட்லிக்கென்று தனி சுவை கிடையாது. எந்தக் குழம்புடன் சேர்த்து சாப்பிடுகிறோமோ அதன் சுவையையும் சேர்த்து தனியாக ஒரு சுவையைக் கொடுக்கக் கூடியது. எனவேதான் இட்லிக்கு அனைத்து குழம்புகளும் செட் ஆகும். பெரும்பாலும் இட்லிக்கு சாம்பாரும், சட்னியும் தான் பயன்படுத்தப்படுகிறது. இவை தவிர பொடி இட்லி மற்றும் விதவிதமான சட்னி அரைத்தும் உண்பர்.
இவ்வாறு இட்லி என்பது நமது அத்தியாவசிய உணவுப் பட்டியலில் இணைந்துள்ளது. இந்த இட்லியை கார்ப்பரேட் பிசினஸாக மாற்றி இன்று கோடிகளில் வர்த்தகம் செய்கிறார் இட்லி இனியவன். கடந்த 1997-ம் ஆண்டு முதல் இட்லி வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறார் இனியவன். பிரபலமானவர்களின் திருமணக்கூடங்களில் இனியவனின் இட்லிக்கு எனத் தனி இடம் உண்டு. காலத்துக்கேற்றாற்போல, சாக்லேட் இட்லி, பீட்ரூட் இட்லி, புதினா இட்லி, இளநீர் இட்லி, சிறுதானிய இட்லிகள் என விதவிதமான பதார்த்தங்களை அறிமுகப்படுத்தியவர்.

#image_title
இட்லித் தொழிலில் இவர் இந்த அளவிற்குப் பிரபலமாவதற்குப் பின்னால் உள்ள வெற்றிக் கதை இதான். கோவையைச் சேர்ந்தவர் இனியவன் குடும்பம் பெரியது. மூன்று வேளை உணவுக்கும் உத்தரவாதம் இல்லாத குடும்பச் சூழல். மதிய சத்துணவு உதவியோடு 8-ம் வகுப்பு வரை படித்துள்ளார். பதினான்கு வயதில் பாடப்படிப்பை கைவிட்டு பின்பு கோயம்பத்தூரில் ஒரு டி கடையில் வெறும் ஒன்றரை ரூபாய்க்கு வேலைக்கு சேர்ந்தார் நம் இனியவன். ஏன் என்றால் அவர்கள் அவருக்கு உணவு அளித்தனர் என்று ஒரு விழாவில் சொல்லி இருக்கிறார்.
பின்பு ஒரு வாடகை ரிக்ஷாவை வாங்கி அதில் இட்லி விற்று சில நாட்களில் பயணிகளின் மதிப்பை பெற்றார். இவரின் ஒரு வாடிக்கையாளர் பெயர் சந்திரா அம்மா. இந்த சந்திரா அம்மா இட்லிகளை செய்து ஹோட்டல்களுக்கு சப்ளை செய்து வந்தார். அவரின் இட்லி தொழிலை பார்த்துக் கொள்ள சென்னை வந்தார் நம் இனியவன்.

#image_title
உலக விஞ்ஞானிகளுக்கே டாட்டா காட்டிய இந்தியாவின் எடிசன்.. யார் இந்த ஜி.டி.நாயுடு?
சென்னை வந்து தன்னுடைய நாட்களை நினைவு கூறுகையில் “மழை வெள்ளம் என் தொழிலை பாதிப்பு அடைய செய்தது. ஆனாலும் நான் துவண்டு போகாமல் ஒரு நல்ல துணியில் எனது இட்லிகளை எடுத்து கொண்டு ஹோட்டல் ஹோட்டலாக சென்று விற்பேன்” என்கிறார்.
இவ்வாறு இனியவனின் இட்லி மக்கள் மத்தியில் பிரபலம் ஆகத் தொடங்கியிருந்தது. மக்களின் ரசனைக்கு ஏற்ப புதுமைகளைப் புகுத்தி இளநீர் இட்லி, பின்பு பீட்ரூட் இட்லி என பல இட்லி வகைகளை அறிமுகம் செய்தார். பின்பு அவர் உலக சாதனைக்காக 124 கிலா எடையுள்ள இட்லியைத் தயார் செய்து சாதனை படைத்தார். இதுமட்டுமின்றி இரண்டாயிரத்திற்கும் மேல் இவரின் இட்லி வகைகளை அறிமுகம் செய்தார். உலக இட்லி தினம் வர ஒரே காரணம், இவர்தான்.
இவ்வாறு தனது தொழிலை விரிவுப் படுத்தி இன்று பல இளைஞர்களுக்கு முக்கிய ரோல்மாடலாகத் திகழ்கிறார் இட்லி இனியவன்.