டி20 உலக கோப்பை கிரிக்கெட்: சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி அறிவிப்பு… முக்கிய வீரர் நீக்கம்…!

By Nanthini on மார்கழி 20, 2025

Spread the love

டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வருகின்ற பிப்ரவரி 7ஆம் தேதி முதல் மார்ச் 8ஆம் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு குழு தலைவர் அஜீத் அகர்கர் தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் கேப்டன் சூர்யகுமார் யாதவ் கலந்து கொண்டுள்ளார். சூர்யகுமார் யாதவ் கேப்டனாகவும் அக்சர் படேல் துணை கேப்டன் ஆகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். சுப்பன் கில் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அதனைப் போலவே ஜிதேஷ் ஷர்மாவும் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இஷான் கிஷன், ரிங்கு சிங் மீண்டும் அணிக்கு திரும்பி உள்ளனர்

இந்திய அணி விவரம்: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அக்சர் படேல் (துணை கேப்டன்), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, ரிங்கு சிங், பும்ரா, ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர், இஷான் கிஷன்.

   

இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் அமெரிக்காவுடன் பிப்ரவரி 7 ஆம் தேதி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் மோதுகிறது. அதை தொடர்ந்து நமீபியாவுடன் 12 ஆம் தேதி டெல்லியில் மோதுகிறது. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் பிப்ரவரி 15 ஆம் தேதி கொழும்புவில் நடைபெற உள்ளது. இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நெதர்லாந்துடன் 18 ஆம் தேதி ஆமதாபாத்தில் மோதுகிறது.