ஒரே மேடையில் இணையும் ‘விஜயபாஸ்கர் 1 & 2’…. ஜூலை 2-ல் அதிமுக கூடாரம் காலி…. மொத்தமாக தூக்கிய CM விஜய்…. தலைகீழாக மாறும் தமிழக அரசியல்….!

By Nanthini on ஆடி 1, 2026

Spread the love

அதிமுகவில் இருந்து முக்கிய தலைவர்கள் அடுத்தடுத்து விலகி வரும் சூழலில், முன்னாள் அமைச்சர்களான சி. விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் இருவரும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகளில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாகவே இவர்கள் கட்சியை விட்டு விலகும் முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது. முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரான சி. விஜயபாஸ்கர் சில நாட்களுக்கு முன்பு தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த நிலையில், தற்போது தவெகவில் இணைவதற்கான இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைகள் முடிவடைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் பரவி வருகிறது.

இதன்படி, ஜூலை 2-ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற உள்ள பிரம்மாண்ட நிகழ்ச்சியில், இவர்கள் இருவரும் அதிகாரப்பூர்வமாக தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் தவெகவின் முக்கிய நிர்வாகிகளான புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன், நிர்மல் குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளதாகத் தெரிகிறது. இந்த இணைவு விழாவை மிக பிரம்மாண்டமாக நடத்த கரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட தவெக மற்றும் மாஜி நிர்வாகிகள் தீவிர ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். குறிப்பாக புதுக்கோட்டை மற்றும் கரூரிலிருந்து ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களைப் பேருந்துகள் மற்றும் கார்களில் அழைத்து வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

   

கட்சியில் இணையும் இந்த முக்கிய நிகழ்ச்சிக்குப் பிறகு, இரு முன்னாள் அமைச்சர்களும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜயை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அரசியல் வட்டாரத்தில் கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது. அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் தொடர்ந்து ஏற்பட்டுவரும் உட்கட்சி மோதல்கள் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், தற்போது முக்கிய தலைவர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அடுத்தடுத்து விலகி வருவது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கட்சிக்கு மிகப் பெரிய சவாலாக மாறியுள்ளது.

   

ஏற்கனவே பல சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவி விலகிய நிலையில், கொங்கு மண்டலத்தில் செல்வாக்கு மிக்க தலைவராகக் கருதப்படும் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் புதுக்கோட்டை பகுதியில் பலம் வாய்ந்த சி. விஜயபாஸ்கர் ஆகியோரின் இந்த அரசியல் முடிவு அதிமுகவின் வலிமையைப் பெருமளவில் பாதிக்கக்கூடும் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். அதேவேளையில் இது தமிழக வெற்றிக் கழகத்திற்குப் பெரும் பலமாக அமையலாம் என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையில், அதிமுகவில் இருந்து மேலும் சில முன்னாள் அமைச்சர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் விலகத் தயாராக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி வருவதால், தமிழக அரசியலில் அடுத்த சில நாட்களுக்குப் பரபரப்பு நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.