Categories: சினிமா

இப்போ அந்த ஊசி போட்டிருக்க கூடாதுனு வருத்தப்படுறேன்… மனம் திறந்த சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை…

Spread the love

பாக்யஸ்ரீ என்று அழைக்கப்படும் பாக்கியலட்சுமி 1980களில் தென்னிந்தியாவின் முக்கிய நடிகையாக திகழ்ந்தவர். தமிழ் மலையாளம் கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் கிட்டத்தட்ட 60 படங்களுக்கும் மேல் நடித்து பிரபலமானவர். பாக்கியலட்சுமி சென்னையில் தமிழ் பிராமண குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். இவர் முறையாக பரதநாட்டியத்தை கற்று தேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

1982 ஆம் ஆண்டு தேவியின் திருவிளையாடல் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் பாக்கியலட்சுமி. அடுத்ததாக மலையாள சினிமாவுக்கு சென்று அங்கு கவனம் செலுத்ததினார். பின்னர் 1984 ஆம் ஆண்டு நியாயம் கேட்கிறேன், நலம் அறிய ஆவல், சாந்தி முகூர்த்தம் ஆகிய மூன்று திரைப்படங்களில் நடித்தார்.

தொடர்ந்து சங்கிலி ஜெயபால், வளையல் சத்தம், கொடி பறக்குது, ஒரே ரத்தம், சக்தி பராசக்தி, சின்ன வாத்தியார், மாப்பிள்ளை மனசு பூப்போல போன்ற படங்களில் நடித்தார். இறுதியாக இவர் நடித்த திரைப்படம் 2019 ஆம் ஆண்டு வெளியான தர்மபத்தினி என்ற படமாகும்.

2000களின் நடுப்பகுதிக்கு பிறகு வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரைக்கு வந்த பாக்கியலட்சுமி பல தொலைக்காட்சி தொடர்களில் டித்திருக்கிறார். சன் டிவி ஜெயா டிவி விஜய் டிவி போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்திருக்கிறார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை தொடரில் பார்வதி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நடிகை பாக்கியலட்சுமி.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட பாக்கியலட்சுமி நடிக்க ஆரம்பித்தபோது தான் செய்த தவறை கூறியிருக்கிறார். அது என்னவென்றால் நடிக்க ஆரம்பிக்கும் போது இளமையாகவும் ஸ்லிம்மாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு ஊசி போட்டுக்கிட்டேன். அந்த ஊசி ஏன் போட்டோம்னு இப்போ நான் வருத்தப்படுறேன். ஏன்னா அந்த ஊசியா எனக்கு இப்ப ரொம்ப வெயிட் போட்டுச்சு. நான் என்னதான் டயட் ஃபாலோ பண்ணாலும் எக்ஸசைஸ் பண்ணாலும் என்னால வெயிட் குறைக்கவே முடியல. இப்போ நான் அந்த ஊசியை போட்டு இருக்க கூடாது வருத்தப்படுகிறேன் என்று மனம் திறந்து பேசி இருக்கிறார் பாக்கியலட்சுமி.

admin

Recent Posts

“பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு…! SBI வங்கியில் 1,500 பணியிடங்கள்… விண்ணப்பிக்க முழு விவரங்கள் உள்ளே…!”

1500 பயிற்சி அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறித்த செய்தி இடம் பெற்றுள்ளது. தகுதியுள்ள பட்டதாரிகள் இன்று முதல்…

4 மணத்தியாலங்கள் ago

பேப்பர் பேனாவுக்கு ₹986 கோடி செலவிட்ட SBI… டிஜிட்டல் உலகிலும் தொடரும் ஸ்டேஷனரி செலவு…!!

பாரத ஸ்டேட் வங்கி கடந்த நிதியாண்டில் பேப்பர் மற்றும் பேனா உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்களுக்காக மட்டும் ரூ.986 கோடி செலவிட்டுள்ளதாகக்…

4 மணத்தியாலங்கள் ago

போன்பே பயன்படுத்துபவரா நீங்கள்..? இனி ₹100 அபராதம்… புதிய அதிரடி உத்தரவு…!!

போன்பே-ஐ ஒரு வருடம் வரை பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பயனர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட உள்ளது. தொடர்ந்து 12 மாதங்கள் பயன்படுத்தப்படாத…

4 மணத்தியாலங்கள் ago

“டிகிரி முடிச்சவங்களுக்கு எஸ்பிஐ கொடுத்த ஜாக்பாட்.. 1,500 காலியிடங்கள்.. கடைசி தேதி எப்போது தெரியுமா?.. உடனே அப்ளை பண்ணுங்க”…!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, நாடு முழுவதும் 1,500 பயிற்சி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான…

4 மணத்தியாலங்கள் ago

“இப்படியும் கூட சம்பாதிக்கலாமா?.. ஒரு ரீல்ஸுக்கு ரூ.76 லட்சம்.. பார்ட்டிக்கு வர ரூ.25 லட்சம்.. ஓரியின் ‘மாஸ்’ பிசினஸ் மாடல்..!!

முகேஷ் அம்பானி குடும்பம் முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் வரை அனைவரது வீட்டு விசேஷங்களிலும் தவறாமல் கலந்துகொள்ளும் பிரபலமாக ஓரி வலம்…

4 மணத்தியாலங்கள் ago

திமுகவில் இருந்து விலகும் செந்தில் பாலாஜி..? அதிமுக போட்ட ரகசிய ப்ளான்… அதிர்ச்சியில் ஸ்டாலின்…!”

திமுகவிலிருந்து செந்தில் பாலாஜி விலகுகிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டு, இதனால் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஒரு செய்தித் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.…

5 மணத்தியாலங்கள் ago