#image_title
இந்தியாவில் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவர் ஏ ஆர் ரஹ்மான். சிறு வயதிலிருந்து இசையோடு பயணித்தவர் ஏ ஆர் ரஹ்மான். தமிழ்நாட்டில் சென்னையில் பிறந்தவர். இவரது இயற்பெயர் அருணாச்சலம் சேகர் திலீப்குமார் என்பதாகும். பின்னர் இஸ்லாத்தை தேர்வு செய்து அதன் வழியில் மாறிவிட்டார் ஏ ஆர் ரஹ்மான். சிறுவயதிலேயே தனது தந்தையை இழந்ததால் குடும்பத்தில் வருமானம் இல்லாத நிலையில் தந்தையின் இசை கருவிகளை வாடகைக்கு விட்டு அதில் வரும் வருமானத்தில் குடும்பத்தையும் பார்த்துக் கொண்டு பியானோ ஆர்மோனியம் மற்றும் கீதார் ஆகியவற்றை வாசிக்க கற்றுக் கொண்டார்.
பின்னர் எம் எஸ் விஸ்வநாதன் ஜாகிர் உசேன் குன்னக்குடி வைத்தியநாதன் போன்ற இசையமைப்பாளரிடம் உதவி இசையமைப்பாளராக பணியாற்றினார். 1992 ஆம் ஆண்டு மணிரத்தினம் இயக்கிய ரோஜா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதற்கு பிறகு இவர் எண்ணிலடங்கா வெற்றி படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். தமிழ் இந்தி ஆங்கிலம் போன்ற மொழி திரைப்படங்களுக்கு இசையமைத்து இந்தியா முழுவதும் பிரபலமானவர் ஏ ஆர் ரஹ்மான்.
இவரை இசைப்புயல் என்று மக்கள் அழைக்கின்றனர். தனது இசையமைப்பிற்காக ஆஸ்கார் விருது கோல்டன் குலோப் விருது தேசிய விருதுகளை பெற்றவர் ஏ ஆர் ரஹ்மான். ஹாலிவுட் திரைப்படமான ஸ்லும்டாக் மில்லியனர் படத்திற்காக ஆஸ்கார் விருதினை பெற்றார். இந்திய அரசு இவருக்கு 2019 ஆம் ஆண்டு பத்மபூஷன் விருதினை வழங்கியது.
இது மட்டுமல்லாமல் இந்தியாவின் எந்த இசையமைப்பாளருக்கும் கிடைக்காத ஒரு மரியாதை ஏ ஆர் ரஹ்மானுக்கு கிடைத்திருக்கிறது. அது என்னவென்றால் கனடாவில் மர்க்கம் என்ற இடத்தில் இருக்கும் ஒரு தெருவிற்கு ஏ ஆர் ரஹ்மானின் பெயரை சூட்டி இருக்கிறது அந்த நாட்டின் அரசாங்கம். உலகிற்காக அவரது இசை சேவையை பாராட்டி அவரது பெயரை 2013 ஆம் ஆண்டு வைத்தது கனடா அரசாங்கம். எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் அவ்வளவு எளிமையாக இருப்பவர் ஏ ஆர் ரஹ்மான். அதனாலே அவர் புகழ் பெற்றிருக்கிறார்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலில், பாஜகவை வீழ்த்தி மீண்டும் ஆட்சியைப் பிடிக்க அகிலேஷ் யாதவ்…
தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருந்தாலும், பெரும்பான்மைக்குத் தேவையான 10 இடங்களுக்குப் பல்வேறு கட்சிகள்…
திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன், காங்கிரஸ் கட்சியின் தற்போதைய நிலை குறித்து விமர்சன ரீதியான கருத்துக்களை முன்வைத்துள்ளார். காங்கிரஸ்…
தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் சென்னை மண்டலத்தில் விஜய் தலைமையிலான தவெக அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, சென்னையில் உள்ள 16…
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பே தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஐடி விங்குடன் இணைந்து காங்கிரஸ் கட்சி பணியாற்றியதாக வெளியான…
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தொங்கு சட்டசபை (Hung Assembly) ஏற்பட்டுள்ள சூழலில், அதிமுக-வின் அடுத்தகட்ட நகர்வு…