நடிகர் சரத்குமாரின் அரசியல் பாதை திமுகவிலிருந்து தான் தொடங்கியது. ஆரம்பத்தில் திமுகவில் இருந்த அவர் எம்பியாக திகழ்ந்தார். பிறகு வெளியே வந்து அதிமுக பக்கம் சாய்ந்தார். அதுவும் சரி வராததால் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை தொடங்கிய நடத்தி வந்தார். ஆனால் அதிலும் அவரால் வெற்றி பெற முடியவில்லை. இதனிடையே யாரும் எதிர்பார்க்காத விதமாக கட்சியை அப்படியே கொண்டு போய் பாஜகவில் இணைத்து விட்டார். பாஜகவில் இணைந்த அவருக்கு கடந்த நாடாளுமன்றத் தேர்தல் முக்கியமானதாக அமைந்தது.
அதாவது அவருடைய மனைவியும் நடிகையுமான ராதிகா சரத்குமார் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து விஜயகாந்த் மகன் போட்டியிட்டார். இந்த கடும் போட்டியில் கடைசியில் காங்கிரஸ் வேட்பாளரும் நடப்பு எம்.பியுமான மாணிக்கம் தாக்கூர் வெற்றி பெற்றார். இந்நிலையில் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்றும் தனக்கு சீட் கொடுத்தாலும் போட்டியிட மாட்டேன் என்று சரத்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் நான் போட்டியிடவில்லை.
அதற்கு பதில் என்னுடன் இருப்பவர்களை போட்டியிட வைத்து அவர்கள் மூலம் ஆட்சி மாற்றம் ஏற்பட பாடுபட போகிறேன் என்று தெரிவித்தார். சரத்குமார் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று எடுத்த முடிவு அரசியல் போக்கை மாற்றி உள்ளது. பாஜகவை பொறுத்தவரையில் சரத்குமார் போன்ற ஒரு பிம்மம் தேர்தல் பிரச்சாரத்திற்கு பெரிதும் உதவும். அவர் போட்டியிடுவதை விட மாநிலம் முழுவதும் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்காக பிரச்சாரம் செய்வது கட்சிக்கு அதிக லாபத்தை தரும் என்று பாஜக தலைமை கருதி இருக்கலாம். இதனால்தான் சரத்குமார் போட்டியிட போவதில்லை என்று கூறியுள்ளதாக தெரிகிறது. அதே சமயம் ஒருவேளை வரும் நாட்களில் சரத்குமார் அரசியலில் இருந்து விலகலாம் என்றும் அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
