மத்திய பிரதேசத்தில் ஹெல்மெட் அணியாததால் பெட்ரோல் தர மறுத்த பெட்ரோல் பங்க் ஊழியரை பைக்கில் வந்த 2 பேர் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
மத்திய பிரதேசத்தில் நேற்று அதிகாலை 5 மணி அளவில் இருவர் பெட்ரோல் பங்குக்கு பைக்கில் வந்துள்ளனர். ஹெல்மெட் அணியாதவர்களுக்கு பெட்ரோல் வழங்கக் கூடாது என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பின்படி, தேஜ் நாராயண் நர்வாரியா (55) என்ற ஊழியர் அவர்களுக்கு பெட்ரோலை தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த இரு நபர்கள், பெட்ரோல் பங்க் ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றிய நிலையில், அவர் இருவரும் துப்பாக்கியை எடுத்து ஊழியரை சுட்டுள்ளனர். இதில் ஊழியரின் கையில் குண்டடிபட்டது. காயமடைந்த பெட்ரோல் பங்க் ஊழியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். இதன் சிசிடிவி காட்சிகள் இணையதளத்தில் வெளியாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து இரு நபர்களையும் தேடி வருகின்றனர்.
A petrol pump employee, who was following the district administration’s order of refusing fuel to two-wheeler riders not wearing helmets, has been shot at by two men in Madhya Pradesh’s Bhind. @GargiRawat @alok_pandey @manishndtv https://t.co/Hc1hZo6W4X https://t.co/25pvsU40CI
— Anurag Dwary (@Anurag_Dwary) August 31, 2025
