அதிமுக கூட்டணியில் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி இருக்கும் வரை, அமமுக அதில் இணையாது என டிடிவி தினகரன் கூறியுள்ளார். ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, அதிமுகவில் இணையும் திட்டம் உள்ளதா? என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், “அமித்ஷாவை சந்திக்கும் திட்டம் இல்லை. வருகிற தேர்தலில் ‘துரோகம்’ வீழ்த்தப்பட்டு அதிமுக மீண்டும் ஒன்றிணைக்கப்படும் என்பதைக் இன்று நாங்கள் உறுதிமொழியாக எடுத்துள்ளோம் என்றும் தெரிவித்தார்.
