சென்னை மாநகராட்சியில், “நலம் காக்கும் ஸ்டாலின்” முகாமில் பங்கேற்ற அமைச்சர் சுப்பிரமணியன் அளித்த பேட்டியில், “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டத்தில் 2 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். இந்த முகாமில் குழந்தைகள் நலம், காது, மூக்கு, தொண்டை உள்பட 17 வகையான சிகிச்சைகளுக்கு மருத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்றுத்திறன் அளவு குறித்த பரிசோதனை செய்யப்பட்டு, உடனடி சான்றிதழ்களும் வழங்கப்பட்டு வருகின்றனர்.
பருவமழை முன்னெச்சரிக்கையாக சென்னை மாநகராட்சியில், 351 கிலோ மீட்டர் தூரத்திற்கான மழை நீர் வடிகால் தூர்வாரும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் பருவமழை காலங்களில் ஒரே நாளில் 2000 முகாம்கள் நடத்தப்பட்டு, மக்கள் பயனடைந்து வருகின்றனர்.
“அரசு மருத்துவமனைகளில் நாய்க்கடி, பாம்புக்கடிக்கு மருந்து இல்லை” என தகவல் வெளியாகி வருகிறது. கோவை, மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஏதோ ஒரு கிராமத்தில் மருந்தில்லை என்றாலும், நானே விமான டிக்கெட் போட்டு தருகிறேன். அந்த ஊருக்கு வேண்டுமானாலும் நிரூபிப்பவர்கள் செல்லலாம். திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, அனைத்து ஆரம்ப சுகாதார மையங்களிலும் நாய் மற்றும் பாம்பு கடிக்கான மருந்துகள் இருப்பு எப்பொழுதும் வைக்கப்பட்டுள்ளது, என்று அவர் கூறினார்.
தமிழகத்தில் ‘அம்மா மருந்தகங்களில்’ முதலமைச்சர் விஜய்யின் புகைப்படங்களை வைக்க வேண்டும் என்று அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பாப்புலர்…
கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த…
கர்நாடகாவைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரரான லோகேஷ் அக்ஷய் (39), மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோதே திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக…
விசிக கட்சியின் முக்கிய நிர்வாகியும் மேனாள் சட்டமன்ற உறுப்பினருமான ஆளூர் ஷா நவாஸ் திமுகவில் இணையவுள்ளதாக சமூக வலைதளங்களில் ஒரு…
தமிழக வருவாய்த் துறை அமைச்சர் K. A. செங்கோட்டையன் காய்ச்சல், வாந்தி மற்றும் மயக்கம் காரணமாக கோவையில் உள்ள ஒரு…
கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்துவது தவிர்க்க முடியாத ஒன்று என்று…