அடுத்த அதிரடி… விஜய்க்கு நான் பெருசா செஞ்சே ஆகணும்… சபதம் எடுத்த செங்கோட்டையன்….!

By Nanthini on கார்த்திகை 30, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு தேர்தல் களம் நொடிக்கு நொடி பரபரப்பாகவே உள்ளது. ஒரு பக்கம் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் தனது ஆட்சியை தக்க வைப்பதற்காக கூட்டணியை பலப்படுத்திக் கொண்டு வெற்றியை பெறுவதற்கு பல வியூகங்களை வகுத்து வருகிறார். மறுபக்கம் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள இபிஎஸ் இந்த முறை ஆட்சியைப் பிடிப்பதற்கான வேலைகளில் தீவிரம் காட்டி வருகிறார். இவர்களுக்கு நடுவே விஜயும் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாகவே பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இணைந்தது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைந்த செங்கோட்டையனுக்கு மாநில நிர்வாக குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது . தொடர்ந்து சென்னையில் இருந்து கோவை வந்த அவருக்கு தமிழக வெற்றிக்கழகம் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இது குறித்து செங்கோட்டையன் கூறுகையில், எனக்கு கிடைத்த இந்த அன்புக்கும் நான் எவ்வளவு ஆண்டுகளாக பார்க்காத புதிய அரசியல் எழுச்சிக்கும் விஜய் தான் காரணம். நான் விஜய்க்கும் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கும் ஏதாவது பெரிதாக செய்தே ஆக வேண்டும் என்று சபதம் எடுப்பதாக என்ற சபதம் எடுப்பதாக கூறியுள்ள.