கர்நாடக மாநிலம் தட்சிணா கன்னடா மாவட்டம், மங்களூரு புறநகர் அருகே உள்ள பகுதியில் தாயும் மகளும் வசித்து வருகின்றன. அவர்கள் இருவருக்கும் இடையே குடும்ப பிரச்சனை தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த தகராறு தொடர்பாக மூதாட்டி தன்னுடைய மகள் மீது காவூர் போலீசில் புகார் அளித்துள்ளார். அதன் பிறகு போலீசார் அவர்கள் இருவரையும் அழைத்து சமாதானம் பேசி அனுப்பி வைத்தனர். ஆனால் அவர்களின் சண்டை மட்டும் ஓயவில்லை. இப்படியான நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மகள் மீது புகார் அளிப்பதற்காக மூதாட்டி சென்றுள்ளார்.
இந்த மகள் அங்கு வந்து கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் வைத்து தாயுடன் சண்டை போட்ட நிலையில் திடீரென்று மகளுக்கும் தாய்க்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. அந்த சமயத்தில் பெற்ற தாய் என்றும் பார்க்காமல் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் வைத்து மூதாட்டியை அந்த பெண் வெளியே இழுத்து வந்தார். பிறகு மூதாட்டியை காலால் எட்டு விதித்த கீழே தள்ளியது மட்டுமல்லாமல் கீழே விழுந்து கிடந்த அவரை கொஞ்சம் கூட ஈவு இரக்கமில்லாமல் அந்த பெண் கொடூரமாக தாக்கினார்.
மேலும் தான் அணிந்திருந்த செருப்பை கழட்டியும் மூதாட்டியை அவர் தாக்கினார். இந்த தாக்குதலில் மூதாட்டி லேசான காயமடைந்த நிலையில் அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் தற்போது அது தொடர்பான வீடியோவும் சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த வீடியோவை பார்த்த பலரும் வயதானவர் என்று கூட பார்க்காமல் தாக்கிய பெண்ணுக்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
A Daughter beats her elderly mother in broad daylight outside #Moodushedde Panchayat in #Mangalore. But the bigger tragedy? People stood around, watched, filmed… and did NOTHING. If we can’t protect a helpless mother, what humanity do we have left ?#Mangaluru #HumanityDies pic.twitter.com/eVeaM5RvCJ
— Headline Karnataka (@hknewsonline) November 29, 2025
