சாம் CS தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் பிரபலமான இசையமைப்பாளர் ஆவார். இவர் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாள திரைப்பட துறையில் பணியாற்றுகிறார். தேனியில் பிறந்து வளர்ந்த சாம் CS சிறுவயதிலிருந்து இசையில் ஆர்வம் கொண்டவராக இருந்தார். MBA படிப்பை முடித்த சாம் CS க்கு இசையின் மீதுதான் ஆர்வம் அதிகமாக இருந்தது.
அதனால் தான் செய்து கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு திரைப்பட பாடல்களுக்கு பின்னணி இசையமைக்கும் பணியில் ஈடுபட ஆரம்பித்தார். ஆரம்ப காலகட்டத்தில் பல விளம்பரங்களுக்கு இசையமைத்து வந்தார் சாம் CS. 2019 இல் ஓர் இரவு என்ற ஆல்பத்தில் பணியாற்றினார். அதற்குப் பிறகு அம்புலி படத்திற்கு இசையமைத்தார் சாம் CS. இதுமட்டும் இல்லாமல் அவர் பல திரைப்படங்களுக்கு பின்னணி இசை செய்ததன் மூலம் பிரபலமானவர்.
கைதி, புரியாத புதிர், விக்ரம் வேதா, அடங்கமறு, இரவு ஆயிரம் கண்கள் போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்ததன் மூலம் பிரபலமான சாம் CS கடந்த ஆண்டு டிமான்டி காலனி 2, புஷ்பா 2 ஆகிய திரைப்படங்களுக்கு பின்னணி இசை அமைத்து புகழின் உச்சிக்கு சென்று தற்போது அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி பிஸியாக இருக்கிறார் சாம் CS.
இசையமைப்பது மட்டுமல்லாமல் பின்னணி பாடகராகவும் பாடலாசிரியராகவும் பணியாற்றி வருகிறார் சாம் CS. இந்நிலையில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட சாம் CS தனக்கு வாய்ப்பு இல்லாத காலத்தில் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறார் என்பதை பற்றி பகிர்ந்து இருக்கிறார்.
சாம் CS கூறியது என்னவென்றால் 2013 ஆம் ஆண்டிலிருந்து 2017 வரை நான் மிகவும் கஷ்டப்பட்ட காலம் அதுதான். நான் அப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்காமல் கிடைத்ததுக்கு எல்லாம் மியூசிக் போட்டுக் கொண்டிருந்தேன். சின்ன சின்ன விளம்பரங்களுக்கு மியூசிக் போடுவேன். ஒரு மாவட்ட ஆட்சியருக்கு 600 ரூபாய்க்கு மியூசிக் போட்டு கொடுத்து இருக்கிறேன். கட்சி பாடல்களுக்கு மியூசிக் போடுவேன். அதையும் தாண்டி குற்றாலத்தில் விற்கிற 100 ரூபாய் எண்ணெய்க்கு மியூசிக் போட்டு கொடுத்திருகிறேன் என்று உருக்கமாக பேசியிருக்கிறார் சாம் CS.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் விரைவில் அரசியலில் களம் இறங்கத் திட்டமிட்டுள்ளதாகவும், குறிப்பாக அண்ணாமலையுடன் இணைந்து செயல்பட ஆலோசித்து…
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் (TNCSC) தற்காலிக அடிப்படையில் பணியாற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்கள், பருவகால பட்டியல் எழுத்தர்கள் மற்றும்…
சேலத்தில் பிரபல ரவுடி ஜங்ஷன் டேவிட் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், கொலையாளிகளான 7 பேர் காவல்துறையினரிடம் சரணடைந்துள்ள சம்பவம் அப்பகுதியில்…
சமீபகாலமாகத் தமிழக அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் திமுக இடையே நாளுக்கு நாள் சொற்போர்களும் விமர்சனங்களும் தீவிரமடைந்து…
திரையுலகில் தனக்கெனத் தனிமுத்திரை பதித்த நடிகர் தனுஷ், விரைவில் தனிக்கட்சி தொடங்கி அரசியலில் களமிறங்குவது உறுதி என்று அதிமுக மூத்த…
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் நகராட்சி நிர்வாகத் துறையில் 2,538 உதவிப் பொறியாளர்கள் மற்றும் இளநிலைப் பொறியாளர்கள் உள்ளிட்ட பணியாளர்கள்…