தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் ராமராஜன். இவர் நடிப்பில் வெளிவந்த ‘கரகாட்டக்காரன்’ படம் தற்போது டிவியில் ஒளிபரப்பினாலும் பார்ப்பவர்கள் ஏராளம் இருக்கிறார்கள். இந்த படம் வந்து முப்பது வருடங்களுக்கும் மேல் ஆகிறது. மிகப்பெரிய அளவில் வசூலை குவித்தது அந்த படம்.
ஹீரோவாகும் முன்பு ராமராஜன் பல படங்ளை இயக்கியுள்ளார். மதுரை மேலூரில் இருந்து சினிமா ஆசையில் சென்னைக்கு வந்த அவர் ராமநாராயணனிடம் உதவி இயக்குனராக சேர்ந்தார். ‘மண்ணுக்கேத்த பொண்ணு’ என்ற படம் மூலமாக இயக்குனர் ஆனார்.அதன் பிறகு பல படங்களை இயக்கினார்.
அதன்பின் நம்ம ஊரு நல்ல ஊரு என்ற படம் மூலமாக ஹீரோவாக அறிமுகம் ஆனார் அவர்.அந்த படம் வெற்றி பெற்றதால் அதனை தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி ஹீரோவாக வளர்ந்தார். நடிகை நளினியை காதலித்து திருமணம் செய்துகொண்ட அவர் பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்துசெய்துகொண்டார் .
அவர்களுக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் இருக்கிறார்கள். நடிகை நளினி சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஸ்டார்ட் மியூசிக் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்பொழுது அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பிரியங்கா அவரிடம் தங்கள் லவ் ஸ்டோரி பற்றி கொஞ்சம் சொல்லுங்கள் என்று கேட்க அதற்கு அவர்
தான் நடிகர் ராமராஜனை காதலித்து திருமணம் செய்தது முதல் தங்களது லவ் ஸ்டோரி கூறிவிட்டு, தங்கள் இருவருக்கும் விவாகரத்து நடந்திருந்தாலும் தற்பொழுதும் தான் அவரை காதலிப்பதாக கூறினார். இப்படி பிரிந்த பின்னரும் நடிகை நளினி நடிகர் ராமராஜனின் மீது தீராத காதல் கொண்டிருப்பது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
அமெரிக்க பெடரல் வங்கியின் பணவீக்கம் மற்றும் வட்டி விகிதம் குறித்த அறிவிப்புகளால், சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை திடீரென 2,493…
மத்தியப் பிரதேச மாநிலம் சியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராம அரசு ஆரம்பப் பள்ளியில், ஆசிரியை ஒருவர் மாணவர்களை வகுப்பறையை…
அரசியல் களத்தில் தனக்கென தனி முத்திரை பதித்த சென்னை தி.நகர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.கலைராஜன், தற்போது திமுகவிலிருந்து விலகி,…
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகப் பேசியதாக எழுந்த புகாரில், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினரும்,…
மதுரை திருப்பரங்குன்றம் திருமலையூரைச் சேர்ந்தவர் முருகேசன், இவரது மகன் அறிவரசன் (40). இவர் கப்பலூரில் உள்ள ஒரு தனியார் பார்சல்…
ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் பியூட்டி பார்லர் ஒன்றில், அதன் உரிமையாளர் பவானி…