கட்சியின் செய்தித்தொடர்பாளராகத்தான் பேசினேன்” – சர்ச்சைக்குப் பிறகு மன்னிப்புக் கோரிய டிஎம்சி பிரமுகர்: வைரல் வீடியோ..!!

By Swetha on வைகாசி 10, 2026

Spread the love

திரிணாமுல் காங்கிரஸ் (TMC) கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட ரிஜு தத்தா, ஐபிஎஸ் அதிகாரி அஜய் பால் சர்மா குறித்து தான் பேசிய சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்காக பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

முன்னதாக, தேர்தல் நேரத்தில் ஐபிஎஸ் அதிகாரி அஜய் பால் சர்மாவை கடுமையாக விமர்சித்ததோடு, அவரை “இழுத்து வரப்போவதாக” மிரட்டல் விடுக்கும் தொனியில் ரிஜு தத்தா பேசியிருந்தார். இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், கட்சித் தலைமை அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து அவரை இடைநீக்கம் செய்தது.

   

தற்போது வெளியிட்டுள்ள வீடியோவில், தான் ஒரு கட்சியின் செய்தித் தொடர்பாளராகவே அந்த கருத்துக்களைத் தெரிவித்ததாகவும், தனிப்பட்ட முறையில் அதிகாரி மீது தனக்கு எந்தக் காழ்ப்புணர்ச்சியும் இல்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். தனது வார்த்தைகள் யாரையாவது புண்படுத்தியிருந்தால் அதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் அவர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.