தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. இதனிடையே இபிஎஸ் முதுகில் குத்திவிட்டார் என்று நான்கு நாட்களுக்கு முன்பு பிரேமலதா விஜயகாந்த் பேசியதாக செய்தி வெளியாகிய அரசியலில் புயலை கிளப்பியது.
\இதனால் அதிமுக கூட்டணியில் தேமுதிக இணையாது என பேசப்பட்டது. இப்படியான நிலையில் திடீர் திருப்பமாக அண்ணன் இபிஎஸ் முதுகில் குத்தி விட்டதாக நான் சொல்லாத விஷயங்களை சொன்னதாக செய்தி பரவுகிறது. அது தவறானது, அந்த வார்த்தை என் வாயில் வரவே வராது என்று பிரேமலதா டிவிஸ்ட் கொடுத்துள்ளார். இது அரசியலில் புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது. பிரேமலதா இவ்வாறு கூறியுள்ளது அதிமுக கூட்டணியில் அவர் மீண்டும் இணைவார் என்பதை ஏறத்தாழ உறுதி செய்துள்ளதாக தெரிகிறது.
