“மெட்டியில் ஆரம்பித்த சண்டை…”அத்தை இறுதி சடங்கில் வாலிபருக்கு நடந்த கொடூரம்…. போலீஸ் விசாரணை…!!

By Devi Ramu on புரட்டாதி 4, 2025

Spread the love

சென்னை மாவட்டம் கொளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கண்ணனின் சகோதரி மஞ்சுளா உயிரிழந்ததால் கொளத்தூர் சுடுகாட்டில் அவரது இறுதி சடங்கு நடைபெற்றது. அப்போது மது போதையில் இருந்த கண்ணன் தனது சகோதரியின் காலில் இருந்து மெட்டியை கழற்றி தருமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் கோபமடைந்த மஞ்சுளாவின் இரண்டாவது மகன் கிருபாகரனும் அவரது நண்பர்களும் கண்ணனை இறுதி சடங்கு நடக்கும் இடத்தில் இருந்து வெளியேற்றினர்.

உடனே கண்ணனின் மகன் அரவிந்தன் தனது தந்தையை ஏன் வெளியேற்றுகிறீர்கள் என தட்டி கேட்டதால் வாக்குவாதம் முற்றியது. இதனால் கோபமடைந்த கிருபாகரனும், அவரது நண்பர்களும் சேர்ந்து அரவிந்தனை சரமாரியாக தாக்கியுள்ளனர். அப்போது மயங்கி விழுந்த அரவிந்தனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அரவிந்தன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.