‘ஆமா, என் மனைவியை நான் தான் கொன்றேன்’… கணவர் கொடுத்த பகீர் வாக்குமூலம்… அதிர்ந்த போலீசார்…!

Spread the love

ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு நகரில் தனது மனைவியைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விக்ராந்த் தாக்கூர் (42) என்ற நபர், நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். கடந்த டிசம்பர் மாதம் 36 வயதான சுப்ரியா தாக்கூர் மயக்க நிலையில் கண்டெடுக்கப்பட்டு, பின்னர் உயிரிழந்தார். இந்த வழக்கில் விக்ராந்த் மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்ட நிலையில், அவர் ஜனவரி 14 அன்று நீதிமன்றத்தில் ஆஜராகி, “நான் என் மனைவியைக் கொன்றேன், ஆனால் அது திட்டமிட்ட கொலை (Murder) அல்ல; அது எதிர்பாராத மரணம் (Manslaughter)” என்று வாதிட்டுள்ளார்.

நீதிமன்ற விசாரணையின் போது, திட்டமிட்டுச் செய்யப்படும் கொலைக்கும், உள்நோக்கமில்லாமல் நிகழும் மரணத்திற்கும் இடையிலான சட்டப்பூர்வ வேறுபாட்டைச் சுட்டிக்காட்டி விக்ராந்த் தரப்பு இந்த வாதத்தை முன்வைத்துள்ளது. கடந்த டிசம்பர் 21 அன்று காவல்துறையினர் அவர்களது இல்லத்திற்குச் சென்றபோது சுப்ரியா சுயநினைவின்றி இருந்ததாகவும், அவருக்கு முதலுதவி அளித்தும் பலனின்றி அவர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் ஏப்ரல் மாதம் நடைபெறும் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.

மறைந்த சுப்ரியா தாக்கூர் தனது மகனின் எதிர்காலத்திற்காக அயராது உழைத்தவர் என்றும், செவிலியராகப் பணிபுரியும் கனவோடு இருந்தவர் என்றும் அவரது நண்பர்கள் நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்துள்ளனர். தாயை இழந்து தவிக்கும் அவரது மகனின் கல்வி மற்றும் எதிர்காலத் தேவைகளுக்காகச் சமூக வலைத்தளங்கள் மூலம் நிதி திரட்டப்பட்டு வருகிறது. இந்தச் சோகமான சம்பவம் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்திய சமூகத்தினர் இடையே பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

மெகா ட்விஸ்ட்!… வானத்திலிருந்து கொட்டிய பணமழை… ரூ.81,800 பணக்கட்டை பறித்து மரத்தில் ஏறிய குரங்கு… அள்ள முண்டியடித்த மக்கள்… வைரலாகும் வீடியோ…!!

சிம்லாவில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் எதிர்பாராத விதமாகத் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியில் பணத்தைச் செலுத்துவதற்காக ஒருவர்…

10 மணத்தியாலங்கள் ago

அய்யயோ..! மனைவியை காணவில்லை என புகார்… பூட்டிய அறைக்குள் நடந்த மர்மம்… லாட்ஜ் அறையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்… பின்னணி என்ன?…!!

விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…

10 மணத்தியாலங்கள் ago

வீடு புகுந்த மர்ம நபர்கள்… நொடியில் நகைகள் அபேஸ்… பெண்களை மயக்கமடைய செய்து துணிகர கொள்ளை… அரங்கேறிய திடுக்கிடும் சம்பவம்…!!

வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…

10 மணத்தியாலங்கள் ago

இப்படியொரு பழிவாங்கலா?… வேடிக்கை பார்க்கிறதா காவல்துறை?… தாக்கி வீட்டு வாசலில் வீசப்பட்ட இளைஞர்… சிசிடிவியில் சிக்கிய கொடூர முகம்…!!

நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…

10 மணத்தியாலங்கள் ago

இப்படியொரு நிலையா?… “அவை இல்லாமல் என்னால் வாழ முடியாது”… செல்ல பிராணிகளை பிரிந்து கதறி அழுத பாலிவுட் நடிகர்…!!

பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…

10 மணத்தியாலங்கள் ago

திக்… திக்… சாதி மறுப்பு காதலால்… தீபாவளி இரவில் பெற்ற மகளை… துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொன்ற தந்தை… குலை நடுங்கவைக்கும் அதிர்ச்சி சம்பவம்…!!

குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…

10 மணத்தியாலங்கள் ago