மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் ஹோலி பண்டிகையின் போது நடந்த ஒரு நெஞ்சை பதறவைக்கும் சம்பவத்தில், தன் மீது தவறுதலாக வர்ணத்தைப் பூசிய பேரனின் மீது ஒரு பாட்டி கொதிக்கும் சுடுநீரை ஊற்றியுள்ளார். நாக்பூரின் ஆரம்ஷீன் பகுதியில் உள்ள வார்டு எண் 2-ல் இந்த அதிர்ச்சிகரமான நிகழ்வு நடந்துள்ளது.
மேலும் 4 வயது சிறுவன் தனது வீட்டின் வாசலில் வர்ணம் தெளிக்கும் பாட்டிலுடன் விளையாடிக்கொண்டிருந்தபோது, அங்கு வாளியில் கொதிக்கும் நீரை எடுத்துக்கொண்டிருந்த சிந்து தாக்கரே என்ற தனது பாட்டியின் மீது தவறுதலாக வர்ணத்தைத் தெளித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண், கையில் இருந்த கொதிக்கும் நீரை அந்தச் சிறுவன் மீது ஊற்றியுள்ளார்.
இந்தக் கொடூரமான தாக்குதலில் அந்தச் சிறுவன் இடுப்புக்குக் கீழே கடுமையாகப் பொள்ளப்பட்டு, உடல் 45 சதவீதம் தீக்காயங்களுடன் நாக்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். இச்சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது அதில் குழந்தை வலியால் அலறிக்கொண்டு ஓடும் காட்சிகள் பார்ப்போரை உறைய வைக்கின்றன.
இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு சிறு விளையாட்டிற்காகப் பெற்ற பேரனின் மீதே பாட்டி இவ்வளவு கொடூரமான முறையில் நடந்துகொண்டது அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
