ஜோக்கர் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை ரம்யா பாண்டியன். அதனைத் தொடர்ந்து ஆண் தேவதை, ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும், நண்பகல் நேரத்து மயக்கம் என பல திரைப்படங்களில் நடித்தார். குக் வித் கோமாளி மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இவர் கடந்த ஆண்டு இறுதியில் தான் தனது நீண்ட நாள் காவலரை திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த கையோடு தாய்லாந்து தலைநகரத்தில் ஹனிமூன் கொண்டாட்டத்தில் இருந்து வந்தார்.

பல நாட்கள் கணவருடன் தொடர்ந்து நேரத்தை செலவிட்டு வந்த ரம்யா பாண்டியன் மீண்டும் ஃபோட்டோ ஷூட் பக்கம் திரும்பியுள்ளார். இப்படியான நிலையில் கடந்த சில நாட்களாக தம்யா பாண்டியன் கணவர் வீட்டில் இருந்து வரதட்சனை வாங்கி கல்யாணம் செய்தார் என்ற செய்தி இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கிறது. இதனை அறிந்த ரம்யா பாண்டியன் தற்போது அதற்கான விளக்கத்தை ஒரு வீடியோவில் கூறியுள்ளார். அதில், கடந்த சில நாட்களாகவே என்னைப் பற்றி சில விஷயங்கள் ட்ரெண்டாகி வருகின்றது.

ரம்யா பாண்டியன் வரதட்சணை வாங்கி கல்யாணம் செய்தார் என்று பலரும் பலவிதமாக செய்திகளை வெளியிட்டுள்ளனர். மற்ற வதந்திகள் பற்றி நான் பேசியது கிடையாது. ஆனால் இது உணர்ச்சிபூர்வமானதாகவும் அதற்கு விளக்கம் அளிக்கக் கூடிய விஷயமாகவும் இருப்பதால் இது குறித்து நான் பேச விரும்புகிறேன். ஒரு பெண்ணுக்கு பொருளாதார சுதந்திரம் இருக்க வேண்டும் என்று நான் எப்போதும் நினைப்பேன். அதை நான் நம்புவது மட்டுமல்லாமல் அப்படித்தான் இருக்கணும் என்று நினைக்கிறேன். நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போதிலிருந்தே என்னுடைய குடும்பத்திற்கு பொருளாதார ரீதியாக பல உதவிகளை செய்து வருகிறேன்.

11,12 ஆம் வகுப்பு ஸ்காலர்ஷிப் மற்றும் கல்வி கடன் என அனைத்தையும் நான்தான் அடைத்தேன். கல்லூரி முடித்ததும் வேலைக்குச் சென்றேன். பிறகு சிம்லா வந்ததும் 2 வருடங்கள் பணரீதியாக கஷ்டப்பட்டேன். அப்போது இருந்து இன்றுவரை நான் தான் குடும்பத்தை பார்த்துக் கொள்கிறேன். நாம் கொடுக்கணும் என்று நினைக்கனும், வாங்க கூடாது என்று நினைப்பேன். அப்படி இருக்கையில் கல்யாண செலவு என்று வரும்போது நான் தான் அவர்களை செலவு செய்ய விட்டேன் என்று எழுதினார்கள். என்னுடைய தரப்பில் இருந்து நான் சொல்ல விரும்புவது கல்யாண செலவுக்கு கூட என் விருப்பப்படி தான் நடந்தது. எந்த செலவாக இருந்தாலும் அதனை பாதிக்கு பாதி பகிர்ந்து கொள்ளலாம் என்று நான் சம்பாதித்ததை திருமண செலவுக்கு கொடுத்தேன்.

இப்படி நிறைய விஷயங்கள் இருக்கும்போது வரதட்சணை என்று சொல்லி விட்டார்களே என்று வருத்தமாக இருந்தது. பஞ்சாப்புக்கு நாங்கள் செல்லும்போது அவர்கள் எங்களிடம் ஒரு விஷயம் சொன்னார்கள். என் கணவர் மற்றும் மாமனார் மாமியார் என அனைவருமே ரொம்ப ஸ்வீட் தான். அப்படி ஒரு குடும்பம் எனக்கு கிடைத்தது ஒரு ஆசீர்வாதம் என நினைக்கிறேன். என்னை ஒரு லட்சுமியாகத்தான் அவர்கள் பார்த்தனர். அதனால் அவர்கள் எனக்கு நகைகள் போட்டு என்னை அழைக்கவும். அது எனக்கு பிடித்தாலும் நான் வேண்டாம் என்று கூறினேன். பிறகு எப்படியோ வற்புறுத்தி என்னை சம்மதம் தெரிவிக்க வைத்தனர். அதனை யாரும் வரதட்சணை என்று சொல்ல வேண்டாம் என உங்களிடம் நான் கேட்டுக்கொள்கிறேன் என ரம்யா பாண்டியன் அந்த வீடியோவில் பேசியுள்ளார்.
Instagram இல் இந்தப் பதிவைக் காண்க
