தமிழ் சினிமாவில் 80காலகட்டத்தில் கிளாமர் மற்றும் குடும்ப பாங்கான படங்களில் தூள் கிளப்பி நடித்தவர் தான் நடிகை ராதா. நடிக்க வந்த ஆறு வருடங்களிலேயே 100 படங்களுக்கு மேல் நடித்தார். 10 ஆண்டுகளில் சுமார் 122 படங்கள் நடித்தார். இதுவரை இந்திய சினிமாவில் குறைவான நேரத்தில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த ஒரே நடிகை என்ற சாதனையை ராதா பெற்றுள்ளார். இவருடைய அக்கா தான் அம்பிகா. அம்பிகாவை ஒரு முறை அவருடைய தாயார் மலையாளத்தில் பாரதிராஜா இயக்க உள்ள திரைப்படத்திற்கு அழைத்துச் சென்றபோது அவர் பார்ப்பதற்கு மலையாள பெண் போல இருப்பதால் பாரதிராஜா வாய்ப்பு கொடுக்கவில்லை.
/indian-express-tamil/media/media_files/XNy0ua9syk9B21KdylSx.jpg)
பிறகு அவருடைய தாயார் தன்னுடைய மூன்று மகள்களின் படத்தையும் பாரதிராஜாவிடம் காண்பித்த போது ராதாவை பார்த்து இந்தப் பெண் என்னுடைய படத்திற்கு சரியாக இருப்பார் என்று நினைக்கிறேன் என பாரதிராஜா கூறியுள்ளார். அதன் பிறகு ராதாவை வீட்டில் அழைத்து பேசியதும் தன்னுடைய அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்தில் ராதாவுக்கு கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பை வழங்கினார். அலைகள் ஓய்வதில்லை திரைப்படம் நடிக்கும் போது நடிகை ராதா ஒன்பதாம் வகுப்பு படித்து முடித்து இருந்தார். தனக்கு மலையாளம் மட்டுமே தெரியும் என்பதால் படத்தில் வரும் வசனங்கள் அனைத்தையும் அடையாளத்தில் எழுதி வைத்துவிட்டு நடித்துள்ளார்.
/indian-express-tamil/media/media_files/2ejw9Tm5gPCPD7FMcKYQ.jpg)
இதுதான் ராதாவின் முதல் படமா என்று கேள்வி கேட்கும் வகையில் அந்த அளவிற்கு அற்புதமாக நடித்திருந்தார். அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்தில் ராதா அறிமுகமானபோது ரசிகர்கள் அனைவரும் அவரை ஒரு கவர்ச்சி நடிகையாக தான் பார்த்தார்கள். ஆனால் அவருக்குள் மிகப்பெரிய நடிப்பு திறமை இருப்பதை கலைகள் ஓய்வதில்லை படப்பிடிப்பிலேயே பாரதிராஜா உணர்ந்து கொண்டார். ஆனாலும் பாரதிராஜா எதிர்பார்த்ததைப் போல நல்ல நல்ல கதாபாத்திரங்கள் ராதாவுக்கு அமையவில்லை. அதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால் தமிழ் திரைப்படங்களை தவிர்த்து தெலுங்கு திரைப்படங்களில் ராதா அதிகமாக நடிக்க தொடங்கியதுதான். அவருடைய நடிப்புத்திறன் ரசிகர்கள் மத்தியில் சென்று சேரவில்லையே என்ற கவலை பாரதிராஜாவுக்குள் இருந்தது.

ஆனால் அந்த கவலையை காதல் ஓவியம் திரைப்படம் போக்கும் என்று பாரதிராஜா நம்பினார். அந்தப் படத்தில் ராதா அந்த அளவிற்கு தன்னுடைய அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். ஆனால் அந்தத் திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு மக்கள் மத்தியில் பெரிய அளவு வரவேற்பை பெறவில்லை. பொதுமக்கள் அந்த படத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்றாலும் பத்திரிக்கை விமர்சகர்கள் அந்த படத்தை பாராட்டி எழுதுவார்கள் என்று பாரதிராஜா எதிர்பார்த்தார். ஆனால் அவர் எதிர்பார்த்த மாதிரி எதுவுமே நடக்கவில்லை. அந்த வருத்தம் பாரதிராஜா மனதில் இருந்த காரணத்தினால் அதை போக்குவதற்காகவே முதல் மரியாதை படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பை ராதாவுக்கு பாரதிராஜா மீண்டும் வழங்கினார்.

காதல் ஓவியம் திரைப்படத்தில் எந்த அளவு ராதாவுக்கு வரவேற்பு கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்த்தாரோ அந்த வரவேற்பு முதல் மரியாதை திரைப்படத்தில் கிடைத்தது தனக்கு மகிழ்ச்சி என்று பாரதிராஜாவே ஒரு பேட்டியில் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் ராதாவுக்கு பெயரையும் புகழையும் பெற்றுத் தந்தது பாரதிராஜா என்பது அனைவரும் அறிய வேண்டிய உண்மைதான். இந்தத் திரைப்படத்தை முடித்த பிறகு ராதாவுக்கு தனி ஒரு அந்தஸ்து சினிமாவில் கிடைத்த நிலையில் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் பிடித்தார்.

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் கலக்கி வந்த ராதாவுக்கு கடந்த 1991 ஆம் ஆண்டு வெளிவந்த சாந்தி என் சாந்தி திரைப்படம் தான் கடைசி படம். அதன் பிறகு ராஜசேகரன் நாயர் என்பவரை ராதா திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். இவருக்கு கார்த்திகா, விக்னேஷ் மற்றும் துளசி என்ற மூன்று பிள்ளைகள் உள்ள நிலையில் மகள் கார்த்திகா சினிமாவில் கோ மற்றும் டீல் உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார். இருந்தாலும் இவ்வாறு சினிமாவில் பெரிதாக வெற்றி பெறவில்லை. ராதா கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக சினிமா பக்கம் வராமல் இருந்தாலும் பல நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று வருவது குறிப்பிடத்தக்கது.
