தனுஷை பார்த்தாலே பயமாக இருக்கும்.. அவரை ஏமாற்றி விடலாம் என நினைத்தேன்.. நடிகர் விஜய் ஆண்டனி ஓபன் டாக்..!!!

By Divyamayakannan on புரட்டாதி 10, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் சுக்ரன் படத்தின் இசை அமைப்பாளராக அறிமுகமானவர். தற்போது நடிகர், இயக்குனர் மற்றும் பாடகர் என தமிழ் சினிமாவையே கலக்கி வரும் நடிகர்தான் விஜய் ஆண்டனி. பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இவருடைய தனித்துவமான இசைக்கு ரசிகர் பட்டாளமே உள்ளது. இசைக்கு பின் கதாநாயகன் என ஒட்டிக்கட்டி பறந்து வருகிறார். சலீம், பிச்சைக்காரன் என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து உள்ளார். தற்போது அவர் 25 ஆவது படமாக சக்தித் திருமகன் என்ற படத்தில் நடித்துள்ளார். வருகின்ற செப்டம்பர் 19ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.

இந்த நிலையில் விஜய் ஆண்டனி அவர்கள் நடிகர் தனுஷை பற்றி நேர்காணல் ஒன்றில் பேசிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரல். நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் மனைவி லதா மூலமாக தான் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பழக்கமானார். ஐஸ்வர்யா அவர்கள் தன்னுடைய கணவர் தனுஷுக்கு இசையில் ஆர்வம் அதிகம், அதனால் அவருக்கு கொஞ்சம் உதவுங்கள் என்று கேட்டுக் கொண்டார். பின்பு தனுஷ் அவர்கள் என்னை சந்திக்க வந்தார். எதையாவது வாசித்து அவரை அப்படியே அனுப்பி விடலாம் என்று நினைத்தேன். ஆனால் அவருக்கோ இசையைப் பற்றி நன்றாக தெரிந்திருந்தது. அவரைப் பார்த்தாலே எனக்கு பயமாக இருக்கும். பின்பு அவர் கேட்டதை இசை அமைத்துக் கொடுத்தேன் என விஜய் ஆண்டனி அவர்கள் பேசிவுள்ளார்.